செவ்வாய், 14 நவம்பர், 2023

இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா அதிரடி

 சீனாவின் பெல்ட் ரோட் திட்டத்திற்கு பதிலடியாக அமேரிக்கா,
இலங்கை துறைமுகத்தில் 553 மில்லியன் டொலர் முதலீட்டை  அறிவித்துள்ளது!
சர்வதேச அபிவிருத்தி நிதியுதவியில் சீனாவுடன் அமெரிக்க போட்டியில் குதித்துள்ளது
இதன்படி இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான 553 மில்லியன் டாலர் திட்டத்தை அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.
யு.எஸ். இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் படி,
இந்த திட்டம் தெற்காசிய நாட்டிற்கு முக்கியமான உள்கட்டமைப்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்திற்கான  தனியார் கடனாக இது வழங்கப்படுகிறது  sri-lanka-colombo-port
இது கொழும்பு துறை முகத்தின்  கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்தும்,


இலங்கைக்கு அதிக செழிப்பை உருவாக்கும் -
இலங்கையின் இறையாண்மைக்கு பொறுப்பான கடனாக இல்லாமல்  -
அதே நேரத்தில் பிராந்தியம் முழுவதிலும் உள்ள எங்கள் நட்பு நாடுகளின் நிலையை பலப்படுத்தும்" என்று. DFC தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் நாதன் கூறினார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக