செவ்வாய், 21 நவம்பர், 2023

பாலாற்றில் வீணாகும் நீரை 11 ஏரிகளுக்கு திருப்பிவிட்ட திமுக எம்.எல்.ஏ நந்தகுமார்

MLA Nandakumar diverted Palar River water to 11 lakes

மின்னம்பலம் -Aara : வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யாததால் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் உள்ள 11 ஏரிகள் வறண்டு கிடந்தன. MLA Nandakumar diverted Palar River water to 11 lakes
இந்நிலையில் இப்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பாலாற்றில் ஓடும் நீரை அந்த 11 ஏரிகளுக்கும் திருப்பிவிட அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் அணைக்கட்டு  திமுக சட்டமன்ற உறுப்பினரும் வேலூர் திமுக மாசெவுமான  ஏ.பி. நந்தகுமார்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் நம்மிடம்,
“வேலூர் பொதுவாக வறட்சியான மாவட்டமாக அறியப்படுவதுண்டு. ஆனால் பாலாறும், ஏரிகளும் நிரம்பினால் வேலூரில் விவசாயம் கொழிக்கும்.



அணைக்கட்டு தொகுதியில் இறைவன்காடு, விரிஞ்சிபுரம், செதுவாலை, ஓக்கனாபுரம், சத்தியமங்கலம், சுக்லாந்தாங்கல், நரசிங்கபுரம், அண்பூண்டி, சதுப்பேரி,

அப்துல்லாபுரம், கடப்பேரி ஆகிய 11 ஏரிகளும் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் போதிய நீர் வரத்து இல்லாமல் வறண்டன. இதனால் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவ மழை காலத்தில் அதிகப்படியான மழை பெய்தால் மட்டுமே பாலாற்றில் தண்ணீரை பார்க்க முடியும்.

அதன் படி கடந்த 2021 ஆண்டு ஆந்திர வனப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் தடுப்பணைகளைக் கடந்து தமிழகத்தில் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது,

அத்துடன் திருப்பத்தூர் வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள கிளை ஆறுகளான மண்ணாறு, கல்லாறு, மலட்டாறு, அகரம் ஆறு, கெளண்டன்யா மகாநதி, பேயாறு, பொன்னை ஆறுகளில் வரும் வெள்ளமும் இணைந்து அதிகப்படியான வெள்ளம் சென்றது. ஆனால் 2022  இல் பருவ மழை சரியாக பொழியாத காரணத்தினால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டன. இதனால் விவசாய விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதேநேரம் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பாலாற்றில்  நீர்வரத்து அதிகரித்தது.

MLA Nandakumar diverted Palar River water to 11 lakes

இந்த நிலையில் வேலூர் திமுக மாசெவும் அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார், தனது தொகுதியில் உள்ள 11 ஏரிகளை தனது சொந்த செலவில் பொக்லைன் வைத்து கால்வாய்களை தூர்வாரினார்.

பாலாற்றில் செல்லும் நீரை வீணாக்காமல் ஏரிகளுக்கு திருப்பி விட்டார். அதன் ஒரு பகுதியாக  இறைவன்காடு ஏரி நிரம்பியது.  இதையடுத்து அங்கு சென்று மக்களோடு ஏரியில் மலர் தூவினார் நந்தகுமார்.

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் பொக்லைகள் மூலம் ஏரி பாசன கால்வாய்களை தூர்வாரி ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பி விட்டார், அதை அரசியல் காரணமாக அதிமுக அரசும் அதிகாரிகளும் அதை தடுத்தார்கள்.

அப்போது ஐநூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினருடன் சென்று பாலாறு குறுக்கே உள்ள குடியாத்தம் பள்ளிகொண்டா மேம்பாலத்தில் ஆர்பாட்டம் செய்து அதிகாரிகளை சம்மதிக்க வைத்தார். MLA Nandakumar diverted Palar River water to 11 lakes

ஆனால் இப்போது திமுக ஆளுங்கட்சி என்பதால், போராட வேண்டிய நிலைமை இல்லை. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் இதேபோல தங்களது தொகுதியில் சிறப்பு கவனம் எடுத்தால்… வீணாகும் மழை நீரை விவசாயிகளுக்கு வரமாக்கலாம்” என்கிறார்கள்.
நல்ல விஷயம்தான்!
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக