புதன், 4 அக்டோபர், 2023

நிர்வாண படத்தில் நடித்ததாக பேச்சு: அமைச்சர் ரோஜா கண்ணீர் மல்க வீடியோ

மாலைமலர் :திருப்பதி  தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அமைச்சர் ரோஜா குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சிடிக்கள் காட்டப்பட்டன. ஆனால் சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை.
பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது. (கண்ணீர் விட்டு கதறி அழுதார்).உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா?

முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் கண்டிக்காதது ஏன்?

தெலுங்கு தேசம் ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சுக்கு அவரது மனைவி தன் கணவனை அறைந்திருக்க வேண்டும்.

லோகேஷ் வெட்கமின்றி ட்வீட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை பிரசாரத்திற்கு அழைத்தது ஏன்? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்? என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள்.

நான் உங்கள் கட்சியில் இருக்கும்போது எப்படி நல்லவராகவும், வேறு கட்சியில் இருக்கும்போது கெட்டவராகவும் இருக்க முடியும்.

பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது. கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா. சந்திரபாபு நாயுடுவை கைது செய்தால் ஏன் அழுகிறீர்கள்.

தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. தெலுங்கு தேசம் கட்சியால் அரசியல் ரீதியாக வளர முடியாது.

பண்டாரு சத்யநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ரோஜா பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் பெண் அமைச்சர் ஒருவர் கலங்கி அழுதபடி பேட்டி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரோஜா குறித்து அவதூறு பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து பண்டாரு சத்திய நாராயண மூர்த்தியை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக