வெள்ளி, 6 அக்டோபர், 2023

மனு தர்ம சாத்திரமும் பெண்களும் - பார்ப்பனர்கள் கீழ்சாதிப் பெண்களை அனுபவிக்கும் உரிமையை மலபார் பகுதியில்

 Lulu Deva Jamla :  *மனு தர்ம சாத்திரமும் பெண்களும்*
(சமசுகிருதம்: मनुस्मृति, மனுஸ்மிருதி)
இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் என்பார் மொழி பெயர்த்துள்ளார்.
தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நூலுக்கு மானவ தர்மம் - மானுட அறம் என்று பொருளாகும்.
மனு தர்மத்தில் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.


மனு பூமியின் எஜமானர்கள் என்ற கூற்றின் படி உயர்சாதிப் பார்ப்பனர்கள் கீழ்சாதிப் பெண்களை அனுபவிக்கும் உரிமையை மலபார் பகுதியில் கொண்டிருந்தனர்.
“பார்ப்பனர்கள் தாழ்ந்த சாதிப்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்."
''தேவர்கள் என்றும் மண்ணின் கடவுள்கள் என்றுக் (பார்ப்பனர்கள்) கூறுபவர்களும், ஆளும் வர்க்கமான சத்திரியர்களும் தங்களுக்குக் கீழ்ப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களுடன் முதல் முதலில் உறவு கொள்ளும் உரிமையைக் கொண்டிருந்தனர்” என்பது தெரியவருகிறது.
கி.பி. 1502 இல், இந்தியாவுக்கு வந்திருந்த லூடோவிக்கோல்டி வர்த்தமா கள்ளிக் கோட்டை பார்ப்பனர்கள் பற்றி கூறியது.
''அரசன் திருமணம் செய்யும் போது மிகவும் மதிப்பும் மரியாதையும் உள்ள இந்தப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தன் மனைவியுடன் முதலிரவைக் கழிக்க அவரை அனுப்பிவிடுவர்."
இது போல் ஹாமில்டன் என்ற எழுத்தாளர் எழுதியதில் ''சமோரின் (ஒரு சமூகப் பிரிவு) திருமணம் செய்யும்போது நம்பூதிரியோ அல்லது முதன்மை மதக்குருவோ மணப்பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. இவர் (மதக்குரு) விரும்பினால் மூன்று இரவுகள் கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனின் அப்பெண்ணின் திருமண இரவில் முதல் கனிகள் அவள் வணங்கும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்படவேண்டும்."
 ''அரசக் குடும்பங்களிலும் பிரபு குடும்பங்களிலும் பெண்கள் பார்ப்பனர்கள் மூலம் கருவுறுவதைப் புண்ணியமாகக் கருதினர். பார்ப்பனர்களுக்கு உடல், மன, காம வேட்கைகளில் சுகமளிப்பது சொர்க்கத்தை அடைவதற்கான வழியென பெண்கள் நம்பினர். பார்ப்பனர்கள் விருந்தினனாக வீட்டிற்கு வந்தால், அவன் முதியவனாக இருந்தபோதும், கன்னிகைகளான இளம் பெண்களை அவனுடைய படுக்கையறைக்கு அனுப்ப குடும்பத் தலைவர்கள் ஆர்வம் காட்டினர்.
கன்னிப் பெண்கள் இல்லையென்றால், அந்த வீட்டிலுள்ள மிகவும் வயது குறைந்த பெண், பார்ப்பனனின் பணிவிடைக்காக நியமிக்கப்பட்டாள். அந்தப் பெண்ணுக்குக் கணவன் இருந்தால், அவன் இந்தச் சமயம் அறைக்கு வெளியே படுப்பது வழக்கம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய ஒரு சமுதாய முறை இருந்தது..." பார்ப்பனிய மதம் மற்றைய மதங்கள் மீதான வெற்றிகளின் மீது பக்தியின் பின்னால்  அரங்கேறிய வடிவமிது.
மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25
மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25
மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25
மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்" என்கிறார்,
மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"
மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"25 என்கிறது, இந்து மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.
மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"
மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."
மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."
மனு 9.5 இல், ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;" என்கிறது, இந்து தர்மம்.
மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"
மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது."
மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."
மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"
மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"
கணவன் இறந்தாலும் பெண் சொத்துக்கு உரிமை பெற முடியாது, மாறாக ஜீவனாம்சம் பெற முடியும் என்பதன் மூலம் கணவன் சார்ந்த குடும்பத்துக்கு அடிமையாக இருக்கக் கோருவதுடன் கணவனின் தம்பி, அல்லது அண்ணனுக்கு அல்லது தந்தைக்கு வைப்பாட்டியாக இருக்க, இந்தச் சொத்துரிமை மறுப்பு நிர்ப்பந்திக்கின்றது.
மனு 8.299 இல், ''மனைவி, மகன், அடிமை, மாணவன், இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்" என்று மனுதர்மம் கோருகின்றது.
பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது.
மனு 2.66 இல், ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது" மனு 9.18
மனு 9.36 இல், ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது...."
மனு 9.36 இல், ''அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்...."
மனு 4.205 இல் ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது."
மனு 4.206 இல்,''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்"
மனு 5.151 இல், ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது"
மனு 5.154 இல், ''அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்;"
மனு 5.150 இல், ''அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். வீட்டுக் காரியங்களைத் திறம்பட ஆற்றுதல் வேண்டும்;. பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல் வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்"
மனு 5.155 இல், ''கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்"
மனு 5.153 இல், ''புனித முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே"
- இந்த தர்மத்தை ஏற்படுத்தி பாதுகாப்பவர் யார் என்பதையும் அ‌தி‌ல் உ‌ள்ள சூழ்ச்சியையும் எடுத்து சொல்லி அவற்றிற்கு எதிராக போராடி பெண்கள் இன்று சுதந்திர பறவைகளாக பறக்க காரணம் யார் தெரியுமா?
இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களையும் பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதை அம்பேத்கர், பெரியார் போன்றவர் சமூக நீதி உரைக்கின்றனர்.
ஆகவே பெண்கள் அனைவரும் தயவு செய்து அண்ணலையும் பெரியாரையும் படியுங்கள் 😊
நன்றி:- பவானி
படம்:- திருமணத்தின் போது ஒரு ஆண்மகன் தரையில் விழுந்து தன் மனைவியின் காலை முத்தமிடும் இப்டி ஒரு காட்சியை இந்த மனு தர்மத்தை அடிப்படையாய் கொண்ட நம்ம நாட்டு கலாச்சாரத்தில் கற்பனை செய்யவியலுமா மக்களே? 😊
Lulu Deva Jamla G
#சனாதனலீக்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக