சனி, 7 அக்டோபர், 2023

800 Movie - முன்பு தமிழ் தேசிய கந்துவட்டி சாபக்கேடுகளால் தடைப்பட்டது

 ராதா மனோகர் :  முத்தையா  முரளிதரனின் 800 திரைப்படம் எப்போதோ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கவேண்டியது
தமிழ் தேசிய கந்துவட்டி சாபக்கேடுகளால் அப்போது அது தடைப்பட்டது
தற்போது வெளியாகி இருக்கிறது   வாழ்த்துக்கள்!
இலங்கையில் உள்ள இந்தியவம்சாவளி மக்கள் எல்லோருமே மலையக தோட்ட தொழிலாளர்கள் என்றே இன்னும் கூட பலர் கருதுகிறார்கள்
உண்மையில் ஏராளமான வணிகர்கள் .. குறிப்பாக வட்டிக்கு பணம் கொடுக்கும்  நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
பல தொழில்களை கையில் வைத்திருந்த தூத்துக்குடி நாடார்கள் போன்றவர்களின் இலங்கை செய்திகள் அதிகமாக பொதுவெளியில் வரவில்லை
இலங்கையின் நான்காவது பெரிய தேயிலை தோட்டத்தையே ஒரு கங்காணியால் முப்பதுகளிலேயே வாங்க முடிந்திருக்கிறது என்ற செய்தியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்
செட்டியார்களிடம் இருந்து வட்டிக்கு பெற்ற பணமும் கருப்பையா கங்காணியின் கடும் முயற்சியும் அதை சாதித்து இருக்கிறது

வாக்குரிமை பறிப்பின்  பின்னணி செய்திகள் பற்றி இன்னும் கூட  பல செய்திகள் பொதுவெளிக்கு தெரியாது என்றே கருதுகிறேன்
குறிப்பாக மலையக மக்களின் வாக்குப்பலத்தில் பல சிங்கள இடதுசாரிகள் வெற்றி பெற்றதை பார்த்து கொழும்பு வாழ் இந்திய சமூகமே கூட  பயந்தது
இலங்கையில் இருந்த இந்திய முதலாளிகள் இலங்கை பொருளாதாரத்தையே ஓரளவு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்
இதன் காரணமாகதான் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் உள்ள பல இந்திய வம்சாவளியினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இருந்தனர்
வீரகேசரி  பத்திரிகையே செட்டியார்களின் கைகளிலும் பின்பு நாடார்களின் கையிலும் இருந்த,
 தற்போதும் இருக்கின்ற இப்பத்திரிகை  வாக்குரிமையை பறித்த ஐக்கிய தேசிய கட்சியையே ஆதரித்தது  
ஏனெனில் மலையக மக்களின் வாக்கு வங்கி என்பதை கம்யூனிச வாக்கு வங்கியாக மாற்றி வைத்திருந்தனர் இலங்கை இடதுசாரிகள்.
முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் புகழ் பெற முன்பே அவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்தான்.
லக்கி லாண்ட் பிஸ்கட் என்பது அந்த காலத்தில் மிகவும் பிரபலமான பிராண்ட்
சிறுவயதில் நான் சுவைத்திருக்கிறேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக