வெள்ளி, 29 செப்டம்பர், 2023

வந்தே பாரத். .கொண்டாட ஒண்ணு மில்லை - ரயில்வேயின் NEET

May be an image of train, railroad and text

DrMohamed Kizhar ;   வந்தே பாரத். .கொண்டாட ஒண்ணு மில்லை..ஒரு திணிப்பே ...
ரயில்வேயின் NEET
திருநெல்வேலி to சென்னை  வந்தே பாரத் ரயில்..
 என்னை பொருத்தவரை , இது தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் , பெரும் பாக்கியம் அப்படி யெல்லாம் ஒன்னும் இல்லை..
 மற்ற ரயில்களில்  குறைந்த கட்டணம்  215 ( உட்காரும் வசதி ) , 365
( 3 tier தூங்கும் வசதி) ..ஆக இ‌ந்த கட்டணத்தில் சென்னை போக முடியும். .
வந்தே பாரத் ரயிலில் குறைந்த கட்டணம் 1350 ( வசதிகள் உண்டு என்பது வேறு )..ஆக  கட்டணம் தான் இங்க மேட்டர்..


 சாமானியனுக்கு மற்ற regular ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் போனால், இதில் பயணம் செய்ய இயலவேஇ யலாது. .காரணம் மற்ற சாதாரண ரயிலை விட 5 மடங்கு அதிகம் அழனும்..கூட GST..
 ELITE GROUP க்கு கொஞ்ச கூட கொடுத்தால் Flight ல போகலாம்..ஒரு பொருட்டு அல்ல. .
காரணம் இந்த வந்தே பாரத் Executive கட்டணம் 3000 மேல். .
 ஆக இது நடுத்தர வர்க்கத்தினர் மீது திணிக்க பட்ட ஸ்டேட்டஸ் சுமை. .
 புறப்படும் மற்றும் சேரும் நேரம்..இரண்டாம்கெட்ட
நேரம். .
இரண்டிலும் தென் மாவட்ட மக்கள் கார் மூலம் மட்டுமே திருநெல்வேலி ஸ்டேஷன் வர முடியும்.. இங்கிருந்து வீடு போக முடியும்.. அதுக்கு சில ஆயிரம் அழனும் ..இன்னும் பொருளாதார சுமை. .
ஆக இந்த ரயில் விட்டதில் கொண்டாட, சந்தோஷப்பட ஒன்றும் இல்லை..
மேலும் கொஞ்ச setback, மைனஸ் தான் பயணிகளுக்கு..
ஒருக்கால் ரயில்வே Phased Manner ல தனியார் மயமாக்க பட்டால், முதலில் Corporate க்கு தூக்கி வார்க்கும் Sector ரயில், இந்த வந்தே பாரத தான் இருக்கும். .
ரயில்வே தனியார் மயமாக்க முயற்சிக்கு இது ஒரு ஆரம்ப புள்ளியாக கூட இருக்கலாம். .
இல்லை ரயில்களின் ticket கட்டணம் உயர்த்த பட, இது ஒரு வாய்ப்பாக அமையலாம்..
காலப்போக்கில் எல்லா ரயில்களும் ( just பெயரை மட்டும்) இது போல் மாற்றி ( கட்டணம்) உட்பட, எளிய மக்களுக்கு ரயில் எட்டா கனி ஆகலாம். .
மருத்துவ கல்லூரி admission க்கு NEET போல, ரயில்வேக்கு ஒரு வந்தே பாரத்... போக போக தெரியும்..
இதை என் அதீதமான கற்பனை என்று எண்ணினால்,
இல்லை நிஜம் என்பது நிரூபணம் ஆகும் காலம் வெகு தூரமில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக