சனி, 2 செப்டம்பர், 2023

இந்தியாவில் கணவர்களைத் தேடி Fishing Fleets) கப்பல்களில் வந்த ஆங்கில பெண்கள்

May be an image of 4 people and text

Sundaram : “கணவர்களைத் தேடி..  கடற்பயணம்…
(Fishing Fleets)
விக்டோரியா காலத்து  பிரிட்டனில் வேலையில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு திரிந்த ஆயிரக்கணக்கான வெள்ளைக்கார இளைஞர்களுக்கு மிகப் பெரிய புதையலைத் திறந்து விட்டது கிழக்கிந்திய கம்பெனி..
கம்பெனியில் ஒரு கடைநிலை ஊழியராக சேர்ந்து இந்தியாவுக்கு வந்துவிட்டால் போதும்.
அடுத்த சில ஆண்டுகளுக்குள் பெரும் பொருள் ஈட்டிவிடலாம்;
இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று உல்லாசமாக வாழலாம் என்பதுதான் அன்றைய இளைஞர்களின் திட்டம்/கனவு.
ஆனால் ஆண்டுகளில் இந்தியாவில் ஈட்டிய பணம் பொருள் எல்லாம் இங்கிலாந்தில் சில மாதங்களில் கரைந்து போய் அவர்கள் மீண்டும் வேலை வேண்டி இந்தியாவுக்கே திரும்ப வேண்டிய பொருளாதார நிலைமைதான் அங்கே இருந்தது..  
எனவே பல இளைஞர்கள் இந்தியாவிலே நிரந்தரமாக தங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தனர். அப்படிப்பட்ட ஆண்கள் இந்திய பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர்.


அதே போல், அந்நாளில் ஐரோப்பிய பெண்களுக்கு மிகக் குறைந்த சமூக உரிமைகளே வழங்கப்பட்டிருந்தன.
அடிப்படை கல்விக்குமேல் பட்டப் படிப்புகள் படிக்க பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனவே திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் அமைவது மட்டுமே அவர்கள் முன்னிருந்த ஒரே வழி.
22 வயதுக்குள் திருமணம் செய்துகொள்ளாத பெண்கள் இங்கிலாந்தில் இழிவாக நடத்தப்பட்டனர்.
அதனால், வசதியான கணவர்களைத் தேடுவது என்பது அந்நாட்டுப் பெண்களின் முக்கியமான கடமைகளில் ஒன்றாக இருந்தது…
இங்கிலாந்து சந்தையில் விலை போகாத பல பெண்கள் இந்தியாவுக்குப் படையெடுத்தனர்.
இங்கிருந்த மகராஜாக்களையும் அவர்களது தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் பற்றியும் அவர்கள் கேட்டறிந்த கதைகள் அவர்களை ஊக்கப்படுத்தின.
தங்களது வெள்ளைத் நிறமும் மெலிதான உடலும் இந்திய ஆண்களைக் கவரும் என்று அவர்கள் நம்பினர்.
ஆனால் அப்படி பெரிய புள்ளிகளை தூண்டில் போட்டு பிடித்த பெண்கள்  வெகு விரைவில் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாயினர்.
அவர்கள் எதிர்பார்த்த ராஜபோக வாழ்க்கை கிட்டியபாடில்லை.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற முதுமொழிக்கிணங்க அந்த பெரிய புள்ளிகள் இந்த வெள்ளை பெண்களை சில மாதங்களுக்கு கொண்டாடினாலும் பிறகு,  தங்கள் ஆசை நாயகிகளில் ஒருத்தியாக வீட்டுக்குள் பூட்டி வைக்கலானார்கள்..
இந்த மகாராஜ்களின் பிற்போக்குத்தனத்தையும்,  கஞ்சத்தனத்தையும் பொறுக்க முடியாமல் திருமண பந்தத்திலிருந்து வெள்ளைப் பெண்கள் பலர் வெளியேறினர்.
ஆனால் இங்கிலாந்தில் அவர்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைவிட இங்கு அனுபவிக்கும் சுதந்திரம் பெரிதாக இருந்தது என்பதால் இங்கேயே தங்கிவிட்டவர்களே  அதிகம்.
1887ஆம் ஆண்டு கும்பெனி ஆட்சி முடிவுக்கு வரும் காலம் வரை இந்த பெண்கள் படையெடுப்பு நீடித்தது. கப்பல்களில் கணவனைத் தேடி பயணிக்கும் இந்த கூட்டத்தினரை “Fising Fleets” என்று அழைத்தனர் இங்கிலாந்துப் பத்திரிகைகள்…
இந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் ராஜ்யம் இந்திய துணைக் கண்டம் மட்டுமின்றி ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க கண்டங்கள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டது .  
“தங்கள் ராஜ்ஜியத்தில் சூரியன் மறைவதே இல்லை” என்று அரசியல்வாதிகள் முழங்கினர்..
பிரிட்டிஷ் பொதுமக்களிடையே ஆங்கிலேயர் / ஐரோப்பியர்  மட்டுமே உயர்ந்த குடிகள் என்றும் உலகின் மற்ற, இந்திய ஆசிய, ஆப்பிரிக்க, அரபு இன மக்கள் தங்களுக்கு அடிமைப் பணி செய்யப் பிறந்தவர்களே என்ற கருத்தாக்கம் விதைக்கப்பட்டது.
எனவே ஐரோப்பியர் அல்லாத இனங்களுடன் மண உறவு கொள்வது தங்கள் பெருமைக்கு ஒவ்வாத செயல் என்றானதால், இந்தியாவில் வாழ்க்கைத் துணை தேடும் எண்ணத்தை வெள்ளை ஆண்கள் வெறுத்தனர்.
இதன் காரணமாக, வெள்ளையர்கள், கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்தாலும் இந்தோ ஆங்கில கலப்பு மணங்கள் ஓரளவுக்குக்கூட நடக்கவில்லை.
ஆங்கிலேயர்போல பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் நாடுகளின் காலனிகளும் இந்திய துணைக் கண்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தன.
இனக்கலப்பு குறித்த பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் மக்களின் கருத்தும் ஆங்கிலேயர் கருத்தோடு இசைந்தே இருந்தது.
நீண்ட காலமாக தனியே வாழும் போர்ச்சுகீசிய ஆண்கள் தங்களைவிட தாழ்வான இந்திய இன பெண்களுடன் கலந்துவிடும் ஆபத்தைத் தவிர்க்க போர்ச்சுகல் அரசினர், தங்கள் நாட்டிலிருந்து இளம் பெண்களைத் தருவித்து இங்கிருந்த ஆண்களுக்கு இலவசமாக மேட்ரிமோனியல் சேவைகள் செய்தனர்.
இந்த ஏற்பாட்டில் திருமணம் செய்து கொள்ளும் போர்த்துகீசிய ஆண்களுக்கு பதவி உயர்வு போன்ற ஊக்கத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த ஏற்பாடு ஏனோ வெற்றி பெறவில்லை. போர்ச்சுகீசிய ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை இங்கேயே தேர்வு செய்துகொண்டனர். இதனால் போர்ச்சுகல் காலனி ஆதிக்கப் பகுதிகளில் இந்தோ போர்ச்சுகீசிய கலப்பு மணங்கள் அதிக அளவில் நடைபெற்றன…
Ref: " the fishing fleet " book by 'Anne De Coursy'
Articles in "DNA INDIA " newspaper
and in " The Gurdian "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக