வெள்ளி, 29 செப்டம்பர், 2023

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பிரபு தேவா

Prabhu deva team meet Sri Lanka Prime Minister

 மாலை மலர் :  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் , நடன இயக்குனருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'முசாசி'. அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
 இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்! - Hiru News - Srilanka's  Number One News Portal, Most visited website in Sri Lanka

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள். படக்குழுவினரை கவுரவப்படுத்துவதற்காக அந்நாட்டின் பிரதமரான தினேஷ் குணவர்தன படக்குழுவினருக்கு அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பினை ஏற்ற படக்குழுவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'முசாசி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக