Dhinakaran Chelliah : சனாதன தர்மம் என்பது பொதுவானதல்ல,
அது எல்லா மக்களுக்கும் உரியது அல்ல.
அது குறிப்பாக ஆரிய வேத வைதீகர்களுக்கான தர்மம் அல்லது வாழ்க்கை முறை.
இதைத் தவறாக மற்றவர்களும் (சூத்திர பஞ்சம சண்டாளர்கள்) தமக்கானதாக கருதும் போதுதான் பிரச்சனை எழுகிறது.
சனாதனம் என்பது இரு பிறப்பாளர்களான வைதீகர்களுக்கு மட்டுமே உரியது.
அதில் இருபிறப்பாளர்களான பிராம்மண,க்ஷத்திரிய,வைசியர்களின் நலன்களுக்கு மட்டுமே இடமுண்டு,
மற்றவர்களுக்கு துளியும் அதில் இடமில்லை.
சனாதன நூல்கள் அனைத்தும் சூத்திரர்கள்,சண்டாளர்கள்,
பஞ்சமர்களை, புலையர்களை,அவர்ணர்களை இழிவாகவும் எதிரிகளாகவுமே கருதுகின்றன.
பெண்கள் மற்றும் சூத்திரர்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என பகவத் கீதை முதல் மற்ற சனாதன தர்மசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
சனாதனத்தை நான்கு வேதம்(ஸ்ருதி),நூற்றுக் கணக்கான உபநிடதங்கள்,
இரு இதிகாசங்கள்,நூற்றுக்கணக்கான புராணங்கள், நூற்றுக்கணக்கான ஆகமங்கள்,இருபதிற்கும் மேற்பட்ட தர்மசாஸ்திரங்கள்,உப புராணங்கள்,நூற்றுக் கணக்கான ஸ்தல புராணங்கள்,ஆயிரக்கணக்கான கிரந்த நூல்கள்,ஆயிரக்கணக்கான பக்தி நூல்கள்,சாஸ்திரங்கள் மூலம் அறியலாம்.
இந்த நூல்களெல்லாம் எளிய மக்களுக்கு கிடைக்காத காலம் இருந்தது.கல்வி பொதுவான பிறகு விஞ்ஞானம்,தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் எல்லா நூல்களும் கைக்கு எட்டும் தூரத்திலேயே கிடைக்கின்றன.
சனாதன தர்மசாஸ்திர நீதி நூல்கள் சூத்திரர்களை வேசிக்கு/தாசிக்கு/அடிமைக்கு பிறந்தவர்கள் என்கிறது,இந்த நூல்களை இன்றும் தலைசிறந்தது என முன்னிறுத்துகிறவர்களுக்கு சனாதனத்தின் மீது தார்மீக கோபம் வருவதில்லை.
பிராமணர்களாய் பிறந்தவர்கள் மட்டுமே பிறவிப் பயனை எய்த முடியும்
மற்றவர்கள் ஜென்ம ஜென்மங்களாக கோடிக் கோடி பிறவிகளில் பிறந்து வர்ண அடுக்கு முறையில் சூத்திர்ர்களாய் இருந்து கோடான கோடி ஜென்மங்களுக்குப் பிறகு வைசியர்களாய் பிறந்து கோடானு கோடி ஜென்மங்களுக்குப் பிறகு சத்ரியர்களாகப் பிறந்து பின்னர் கோடானு கோடிக்குப் பிறகு பிராமணர்களாகப் பிறக்கும் போது தகுதியான ஆன்மாவாக மாறுகிறது என்கிறது சனாதனம்,
இது எப்படி பிராமணர்களைத் தாண்டி மற்றவர்களுக்கான வழியாக இருக்க முடியும்.
இந்த வைதீக தர்மம் நம்முடைய தர்மம் அல்ல என்ற உண்மை விளங்கும் போது அது உருவாக்கிய ஜாதி, புனிதம், தீட்டு, மறுபிறவி, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், ஆத்மா,மாயை,கர்மா,தர்மம் இவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்.
ஒன்றுமில்லை, ஓரிரு புராண இதிகாச நூல்களை வாசித்தாலே சனாதனம் என்பது மனித நேயமில்லாதது, அதில் பெண்களுக்கு உரிமை ஏதும் இல்லை, சூத்திரர்கள் அடிமைகள், பார்த்தாலே தீட்டானவர்கள் என்ற உண்மை விளங்கும்.
கல்வி எல்லோருக்கும் பொதுவான பிறகும்,எல்லா நூல்களும் எளிதாக கிடைத்தாலும்,வெகு சிலரே இந்த நூல்களை வாசிக்கின்றனர்.
சனாதன நூல்கள் எதிலும் சூத்திர சண்டாள மஞ்சமர்களின் நலன்கள் இல்லை.
எந்த ஒரு சானதன நூலிலும் சூத்திரனும்,சாதியற்ற அவர்ணர்களும் நல்லவர்களாகச் சித்தரிக்கப்படவில்லை.ஆயிரக்கணக்கான சனாதன நூல்களில் இருந்தும் அப்படி ஒரு நூல் கூட இல்லை.
பெண்களை இழிவுபடுத்தியும், அவர்ணர்களை எதிரிகளாகவும்,சூத்திரர்களை அடிமைகளாகவும்,மற்ற மதத்தினரை மிலேச்சர்களாகவும் கருதும் சனாதனம் எனக்கானதாக எப்படி இருக்க முடியும்?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக