வியாழன், 14 செப்டம்பர், 2023

ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது வி எச் பியை சேர்ந்த இவர் அம்பேத்கர் திருவள்ளுவர் பற்றி அவதூறு பேசியதால்

மாலைமலர் : சென்னை மாம்பலம் ராஜம்மாள் தெருவில் வசித்து வருபவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன்.
84 வயதான இவர் மாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் பற்றி அவதூறு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-
அம்பேத்கர்தான் அரசியல் அமைப்பை கொடுத்தார்னு பல பேரு எழுதிகிட்டு இருக்காங்க.. பேசிகிட்டு இருக்காங்க.. இப்ப இருக்கிற ஆட்சியாளர்களும் இதையே சொல்லிகிட்டு இருக்காங்க.. துதி பாடிகிட்டு இருக்காங்க.


அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவர், டைப் அடிச்சவர், டைப்புக்கு புரூப் பார்த்தவர் தான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கவில்லை.

கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான். இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். காலனி ஆட்கள். எந்த காலனியில் ஒட்டிகிட்டு வந்தாங்கன்னு எனக்கும் தெரியாது.

திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் கிடையாது. அவரோட அப்பா-அம்மா பெயர் யாருக்காவது தெரியுமா?

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இது தொடர்பாக மாம்பலம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆர்.பி.வி.எஸ். மணியனை கைது செய்தனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக