புதன், 6 செப்டம்பர், 2023

பிரகாஷ் ராஜ் : பாரத் - யார் அந்த கோமாளி?

Prakash Raj j : Name the CLOWN who changes CLOTHS and tries to change his COUNTRY s name too .. for his ELECTION DRAMA மாலை மலர்  :   இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா பெயருக்கு மாற்றாக "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தேசிய அரசியலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலத்தரப்பட்டோரும் இது குறித்த தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில், "இந்தியாவின் கருத்துக்கணிப்பு - ஆடைகளை மாற்றிக் கொள்ளும் கோமாளி, தேர்தல் நாடகத்திற்காக நாட்டின் பெயரையும் மாற்ற நினைப்பவரின் பெயரை குறிப்பிடுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பெயரை மாற்றும் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக