புதன், 13 செப்டம்பர், 2023

ரணில் விக்கிரமசிங்க மம்தா பானர்ஜி துபாயில் சந்திப்பு! இந்தியா’ கூட்டணி தலைவர் நீங்களா? மம்தாவிடம் ரணில்!

tamil.oneindia.com  - Nantha Kumar R  : துபாய்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கத்தில் 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணி உருவாகி உள்ளது.
இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணிக்கு தலைவர் நீங்களா?
என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கேட்
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்த கூட்டணி சார்பில் 3 ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
சமீபத்தில் மும்பையில் நடந்து முடிந்த 3வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழுக்கள் அமைக்கப்பட்டன.
இருப்பினும் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? கூட்டணியயின் தலைவர் யார்?
என்பது பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
 துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு 12 நாட்கள் சுற்றுப்பயணமாக அவர் சென்றுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுக்கவும் அவர் சென்றுள்ளார்.

இந்நிலையில் தான் துபாய் விமான நிலையத்தில் மமதா பானர்ஜி திடீரென்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்தார். இதையடுத்து இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். மேலும் கொல்கத்தாவில் நடக்கும் தொழில் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்க வரும்படி ரணில் விக்ரமே சிங்கேவுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதேபோல் ரணில் விக்ரமசிங்கேவும் மம்தா பானர்ஜியை இலங்கை வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்த வேளையில் இருவரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 பற்றியும் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த ‛இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டு இருப்பது பற்றி ரணில் விக்ரமசிங்கே கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது, ‛‛இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தான் தலைமை பொறுப்பை ஏற்க போகிறீர்களா?'' என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

இதனை மம்தா பானர்ஜி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் மம்தா பானர்ஜி முதலில் ஷாக்கானார். அதன்பிறகு சிரித்த முகத்தோடு மம்தா பானர்ஜி பின்வாங்கினார். இதுபற்றி அவர், ‛‛இந்தியா கூட்டணியின் தலைவர் பதவி என்பது மக்களைறுத்தது. மக்கள் எங்களை ஆதரித்தால் நாங்கள் நாளை அதிகாரத்தை எட்டிப்பிடிக்க முடியும்'' என்றார்.

‛இந்தியா' கூட்டணியை பொறுத்தமட்டில் பிரதமர் பதவி மீது மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும்மா னநிதிஷ் குமார், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை பிரதமராக்க திட்டம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போதைய சூழலில் பிரதமர் வேட்பாளர் அல்லது ‛இந்தியா' கூட்டணிக்கான தலைவர் உள்ளிட்டவற்றை அறிவித்தால் பல கட்சிகள் அதிருப்தி அடையலாம். அதோடு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு உடையலாம். இதனால் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த 2 விஷயத்தில் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The India'' alliance has been formed by 26 parties with the aim of defeating the BJP in the 2024 parliamentary elections. In this case, are you the leader of the 'India' alliance? West Bengal Chief Minister Mamata Banerjee gave an unexpected answer to the question asked by Sri Lankan President Ranil Wickremesinghe.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக