வெள்ளி, 15 செப்டம்பர், 2023

மலையகத்தில் ஒரு சுயமரியாதை முழக்கம்! அமைச்சர் ஜீவன் தொண்டமான் : எங்கள் மக்களுக்கு சுயமரியாதை தேவை!

ராதா மனோகர் : இலங்கையில் சுயமரியாதையை ஓங்கி ஒலிக்கும் ஓரே ஒரு தமிழ் தலைவர்
அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான்! .
இந்த காணொளியில் இவர் பல விடயங்களை முன்வைத்திருக்கிறார்
அவற்றில் அவற்றை பற்றிய ஒரு முன்னோட்டம்தான் இது
முழு காணொளியையும் பாருங்கள்!
திரு ஜீவன் தொண்டமான் : நெறைய பேர் மலையகத்தின் வறுமையை மட்டும்தான் காண்பிக்கிறாங்க
மலையகத்தின் பெருமையை ஏன் காண்பிக்கலை?
நான் எப்படி வரமுடியும்?
உங்களுக்கு தெரியுமா மலையகத்தில் இருந்து படிச்ச 35 பேர் இன்னைக்கு வெளிநாட்டில உயர்ந்த பதவில இருக்காங்க.
தோட்டத்தில உள்ள பிரச்சனை காண்பியுங்க நான் இல்லைன்னு சொல்லல
ஆனா நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கோம்ன்னு சொல்லுங்க
மலையகத்தில சௌமியமூர்த்தி தொண்டமான் இல்லைன்னா இன்னைக்கு மலையகத்தில் ஆசிரியர்கள் வந்திருக்க முடியுமா?


நம்ம வளர்ச்சியை நம்மளே உடைக்கிறோம்
ஏன்னா நாம் தாழ்த்தப்பட்டோம்
நம்மளை ஒதுக்கி வச்சுட்டாங்க
 வறுமைல இருக்கோம் கஷ்டத்தில் இருக்கோம்
நீங்க அக்கரப்பத்தனைல  வறுமையை காண்பிச்சீங்க
கொழும்பில பாமன்கடைல பார்த்தீங்களா . கொழும்பில வறுமை இல்லியா?
கணக்கெடுப்பு படி பார்த்தா இப்ப முல்லைத்தீவில்தான் அதிக வறுமை
அதை எடுத்து காண்பியுங்க? விடமாட்டாங்க
ஏன்னா எல்லாருக்குமே அந்த பெருமை இருக்கு
அந்த கௌரவம் இருக்கு  
அந்த சுயமரியாதை இருக்கு      
இன்னைக்கு பாராளுமன்றத்தில் வந்து எல்லாருமே வந்து அட்டைக்கடி பாம்புக்கடின்னு இந்த அனுதாபத்தைதான் சம்பாதிச்சாங்களே தவிர  மரியாதையை நாம சம்பாதிக்கல
நான் சொல்றேன் எனக்கு அனுதாபம் வேண்டாம்
எனக்கு சேரவேண்டிய மரியாதையை கொடுத்தாள் போதும்
மலையகத்தை பொறுத்தவரைக்கும் ஒரு சுயமரியாதை திட்டத்தை கட்டாயம் கொண்டுவரனும்
நான் ஒரு மலையக தமிழன் என்று சொல்றதுல ஒரு பெருமை இருக்கணும்
தேயிலை தோட்ட விவசாயின்னு கூப்பிடுங்க
ரப்பர் தோட்ட விவசாயின்னு கூப்பிடுங்க
கொஞ்சம் கொஞ்சமாக அந்த கௌரவத்தை
அந்த மரியாதையை வந்தால் மக்கள் மரியாதையாக வாழ்வார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக