மின்னம்பலம் - Jegadeesh : ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று (செப்டம்பர் 1) சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அக்ரஹாரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தின் போது அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக வருகிற 9 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக்கோரி சம்மனை திருப்பூரில் சீமானிடம் கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழங்கினர். சம்மனை சீமான் பெற்றுக்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக