வெள்ளி, 29 செப்டம்பர், 2023

ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தியின் விவகாரத்தில் சிக்கிய ரூ.8,320 கோடி நிறுவனம் மூடுவிழா

ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தியின் விவாதத்தில் சிக்கிய ரூ.8,320 கோடி நிறுவனம் மூடுவிழா | Akshata Murty Catamaran Ventures Shut Down
ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தியின் விவாதத்தில் சிக்கிய ரூ.8,320 கோடி நிறுவனம் மூடுவிழா | Akshata Murty Catamaran Ventures Shut Down

news.lankasri.com :பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இணைந்து தொடங்கிய Catamaran Ventures என்ற நிறுவனம் தற்போது மூடுவிழா காண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய நிறுவனமானது பால ஆண்டுகளாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. Infosys நிறுவனர் நாராண மூர்த்தியின் ஆதரவுடன் அவரது மகள் அக்ஷதா மூர்த்தி மற்றும் கணவர் ரிஷி சுனக் ஆகியோர் இணைந்து பிரித்தானியாவில் Catamaran Ventures என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தியின் விவாதத்தில் சிக்கிய ரூ.8,320 கோடி நிறுவனம் மூடுவிழா | Akshata Murty Catamaran Ventures Shut Down @getty
வளர்ந்து வரும் சிறு நிறுவனங்களுக்கு முதலீடு செய்து, அந்த நிறுவனங்களை பெரும் லாபம் ஈட்டச் செய்வதே Catamaran Ventures என்ற நிறுவனத்தின் நோக்கம். இந்த நிறுவனமானது தற்போது சுமார் ரூ.8,320 கோடி மதிப்பிலான சொத்துக்களை கையாள்வதாக கூறப்படுகிறது.

Catamaran Ventures என்ற நிறுவனத்தின் மொத்த மதிப்பு 4.6 மில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிரது. ஆனால் இந்த நிறுவனம் அக்ஷதாவிற்கு சுமார் ரூ.45.75 கோடி பாக்கி வைத்துள்ளது என கூறப்படுகிறது.
அக்ஷதா மூர்த்தியின் நிறுவனம்

மேலும், பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்கும் சில திட்டங்களும் Catamaran Ventures என்ற நிறுவனத்துடன் தொடர்பிருப்பதாக அம்பலமானதும், பெரும் சர்ச்சை வெடித்தது. அத்துடன் Catamaran Ventures நிறுவனத்தால் ஆதரிக்கப்பட்ட சிலர் அரசாங்கத் திட்டங்கள் மூலம் பெரும் பண வரவுகளைப் பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தியின் விவாதத்தில் சிக்கிய ரூ.8,320 கோடி நிறுவனம் மூடுவிழா | Akshata Murty Catamaran Ventures Shut Down

மட்டுமின்றி, மக்கள் வரிப்பணத்தில் அத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதாகவும், இதனால் அக்ஷதா மூர்த்தியின் நிறுவனம் பெரும் வெற்றிபெறுவதாகவும் பேசப்பட்டது.

இந்த நிலையிலேயே விவாதத்தில் சிக்கியுள்ள Catamaran Ventures என்ற நிறுவனத்தை மூடிவிட அக்ஷதா மூர்த்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக