சனி, 5 ஆகஸ்ட், 2023

CM cell இல் complaint register செய்ய போகிறேன்.பார்ப்போம்!

 Radhika Murugesan ; நான் இது வரை ஒரு பைசா விடாமல் வரி காட்டியுள்ளேன்.
என் துரைப்பாக்கம் நிலம் வாங்கியது,வீடு/கிளினிக் கட்டியது அனைத்துமே white.
முழு வரி செலுத்தி செய்தது.
ஆனால் அந்த வீடு கட்டி முடிப்பதற்குள் என்னை வலுக்கட்டாயமாக செய்ய சொன்ன "இதர செலவுகளுக்கு" நான் ஒரு சிறு பிளாட்டே  வாங்கியிருக்கலாம்.
வீடும் கிளினிக்கும் சேர்ந்து இருப்பது போன்ற கட்டமைப்பு.
கொஞ்ச நாளில் patients கண்ட நேரத்தில் கதவை தட்டியதால் என் இன்னொரு சொந்த பிளாட்டான சாலிகிராமத்தில் தங்கி கிளினிக்கிற்கு  காரில்  தினம் சென்று வருகிறேன்.
நிரந்தர EB connection பெறுவதற்கு 10 K பணம் கேட்கப்பட்டது.
இல்லையெனில் செய்ய முடியாது என்று சொன்னர்(மிரட்டினர் ).
அதுவும் சரி போய் தொலையுது என்று கொடுத்தேன்.
பின் போன வாரம் ஒரு EB vigilance வந்து ஏன் residential tariff ல இருக்கீங்க என்று 26 K penalty போட்டது.

கிளினிக் முதலில் full commercial இல்லை. நாங்கள் GST கூட வாங்குவது இல்லை.
அதனால் 1.5 residential தான் இருக்க வேண்டும்.
ஆனாலும் சரி ஒன்னும் பெரிசா expense வந்துடாதுனு கடந்த ஒரு வருடமாக commercial tariff மாற்ற கேட்டுள்ளேன்.
ஒவ்வொரு முறையும் பணம் கொடுங்க கொடுங்க னு torture .
நான் commercial tariff பல முறை முயற்சி செய்யும் போது மேலும் பணம் கேட்கப்பட்டதால் அப்படியே விட்டுவிட்டேன்.

இப்போது என் பக்கத்தில் உள்ள browsing centre இல்tariff  மாற்ற try செய்த போது தொலைபேசி எண் உங்களுடையது அல்ல. EB வேறு எண்ணை வைத்துள்ளனர் என்று சொன்னார்கள் .
கேட்டதற்கு 5 K பணம் கேட்கப்பட்டது.
நான் எதற்காக சரியான எண்ணை மாற்ற/tariff மாற்ற உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மிகவும் கடுமையாக பேச,பயந்து போய் இன்றே தொலைபேசி எண்ணை மாற்றி விடுகிறேன் என்று சொன்னார்.

பெரிய பாரி வள்ளல் போல் அந்த 5 K செலவை department ஏற்றுக்கொள்ளும் என்று காமெடி வேறு செய்தார்கள.கேட்டால் நீங்க ரொம்ப தங்கமானவங்க.அதனால உங்க செலவை நாங்க ஏத்துகிறோம் அப்படினு காதுல பூ வேறு !!!

நான் இதற்கு ஆதாரம் எடுத்து EB vigilance இடமும் anticorruption vigilance கிட்டேயும் இப்படி tariff மாற்ற சொல்லி penalty போடறாங்க.மாத்தணும்னா முதல  தொலைபேசி எண் என்னுடையதாக இருக்க வேண்டும்.

Hostage situation மாதிரி பணம் வசூலிக்கவே அவர்கள் எண்ணை  deliberate ஆக கொடுத்துள்ளனர்.
இனி penalty போட்டால் நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என்று சொல்லி உள்ளேன்.மாற்றுவார்களா பார்க்கலாம்!
என் இரு பெற்றோரும் அரசு ஊழியர்கள் தான்
(தந்தை retired as CE of TWAD தாய் retired Professor of Pathology MMC).
ஒரு பைசா தங்கள் வாழ்நாளில் லஞ்சம் வாங்காத மக்கள்.நானும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு காட்டி சரியாக வரி செலுத்தும் குடிமகள்.
என் வரி பணத்தில் சம்பளம் கொடுக்கப்படும் government servants எப்படி இருக்க வேண்டும் என்று நான் தானே முடிவு செய்ய வேண்டும் ?
இப்படி ஒவ்வொரு layers இலும் அதிகாரிகள் corrupt டாக இருப்பதால் தான் நம் நாட்டு இளைஞர்கள் போதும் டா சாமின்னு அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஓடுகிறார்கள் !

ஆனால் நான் அந்த 5 K donation ஆக கூட கொடுக்க தயார்.
வியர்வை சிந்தி உழைத்த வெள்ளை பணத்தை பேராசை பிடித்த நரிகளுக்கு தீனி போட தயாராக இல்லை .CM cell இல் complaint register செய்ய போகிறேன்.பார்ப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக