ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநர் வசம் இல்லை .. குடியரசு தலைவர் கைகளில் உள்ளது அமைச்சர் மா சுப்பிரமணியம்

 மாலைமலர் : தென்காசி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகளின் கவனிப்பு பிரிவு, ஹோமியோபதி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களை இன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்னும் மருத்துவக் கல்லூரி வராமல் இருப்பதற்கு காரணம் ஒன்றிய அரசு தான் காரணம். ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காததால் தான் மாவட்ட மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு காலதாமதம் ஆகி வருகிறது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவானது தற்போது ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ள சூழலில், கவர்னர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது.

நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கும், கவர்னருக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை. அரசின் நலத்திட்டங்களை அரசோடு இணைந்து மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய ஆளுநர் அரசியல் செய்வது போல் எதிராக செயல்படுவது உள்நோக்கம் பொருந்தியதாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக