வியாழன், 31 ஆகஸ்ட், 2023

காலை உணவும் தினமலரின் கக்கூசும்! வெட்கி தலைகுனியக் கூடிய செய்தி: வன்மையாக கண்டிக்கிறோம் தினமலர் ஆசிரியர் ராமசுப்பு

 dinamalar.com: வெட்கி தலைகுனியக் கூடிய செய்தி: வன்மையாக கண்டிக்கிறோம்
அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அமல்படுத்தியுள்ள
முன்னோடி திட்டமான காலை உணவுத்திட்டம் குறித்து, ஈரோடு- சேலம் 'தினமலர்' பதிப்பில் இன்று (ஆக.,31) வெளியாகியிருக்கும் மிக அருவருக்கத்தக்க,
வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான செய்திக்கும், கி. ராமசுப்பு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வரும் சென்னை, மதுரை, கோவை, புதுவை,  நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

latest tamil news

ஈரோடு- சேலம் தினமலர் பதிப்பானது, திரு.சத்தியமூர்த்தி என்பவரை உரிமைதாரர், வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராகக் கொண்டு கடந்த, 23 ஆண்டுகளாக தனித்து இயங்கி வருகிறது.பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தின் உன்னத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல், மிகக் கீழ்த்தரமான பார்வையுடன் செய்தி வெளியிட்டிருக்கும் ஈரோடு - சேலம் தினமலர் பதிப்பினையும், அதற்கு காரணமான நபர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். வழக்கு நிலுவையில் இருப்பதால் தினமலர் நாளிதழ் பெயர் ஒன்றாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை.

latest tamil news

லட்சோப லட்சம் வாசகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையினைப் பெற்றிருக்கும் 'தினமலர்' பெயரிலேயே இப்படியொரு தரம்தாழ்ந்த செய்தியினை வெளியிட்டு, தினமலர் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஈரோடு- சேலம் பதிப்பின் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

ஆசிரியர், தினமலர்.

சென்னை, மதுரை, கோவை, புதுவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக