செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு! கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு..

 மாலை மலர் : பிரிட்டன் நாட்டின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான திட்டங்களை வழக்கம் போல் தானியங்கி முறையில் இயக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக விமானிகள் விமானத்தை இயக்கும் வழித்தடம் பற்றிய தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை என்ற போதிலும்,
பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், பல விமானங்கள் தாமதமாகவும் கிளம்பி செல்ல நேர்ந்தது.


இதன் காரணமாக பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
திங்கள் கிழமை தினத்தில் வான் போக்குவரத்து அதிக பரபரப்பாக இருக்கும் என்பதால், கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருந்த போதிலும், தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக