மாலை மலர் : என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் தொடர்பாக நடிகை வரலட்சுமி விளக்கம். கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.
ஆனால், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
கேரளாவின் விழிஞ்சத்தில் போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் வழக்கில் கைதான ஆதிலிங்கம், 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு எங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. என்.ஐ.ஏ சம்மன் அனுப்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக