செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

இனவாதத்தை தூண்ட முயலும் தமிழ் அரசியல்வாதிகள் - அருண் சித்தார்த்

hirunews  : நாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களது, தனிப்பட்ட அரசியல் இலாபத்துக்காக நாட்டினுள் இனவாதத்தை தூண்டுவதற்கு, முயலுவதாக யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
எமது ஹிரு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் 137 வருடங்களாக சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வந்ததாகவும், சாதிய அடிப்படையிலான இந்த ஒடுக்குமுறையே விடுதலைப் புலிகளின் பயங்கரவாத யுத்தம் தொடங்குவதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னரும், வடக்கு மக்கள் இன்னும் போருக்குப் பின்னரான மனநிலையினாலும், இன்னும் குல பிரிவினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக