செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

காவல்துறையில் 'காவி'! ஈரோடு புத்தக கண்காட்சியில் எழுந்த சர்ச்சை.. கொதித்தெழுந்த ஆசிரியர் கி.வீரமணி

tamil.oneindia.com - Halley Karthik  : ஈரோடு: ஈரோடு புத்தக கண்காட்சியில் இந்துத்துவத்தை விமர்சிக்கும் புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறையினர் மிரட்டியுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், "போலீசில் உள்ள காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும்" என்று திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், நடத்தப்படும் ஈரோடு புத்தக காட்சி கடந்து 4ம் தேதி தொடங்கியது.
 இந்த புத்தக காட்சியை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன். எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

கடந்த 4ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை 12 நாட்கள் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 வரை இங்கு புத்தகங்களை பார்வையிட்டு வாங்கலாம். குறிப்பாக இந்த புத்தக காட்சிக்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. மொத்தம் 230 அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பதிப்பாளர்கள் லட்சக்கணக்கான புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த புத்தக காட்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன் எழுதிய 'இந்துத்துவ பாசிசம்:வேர்களும் விழுதுகளும்' எனும் புத்தகத்தையும், அர்த்தமற்ற இந்து மதம் உள்ளிட்ட புத்தகங்களையும் விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை மிரட்டியுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், "காவல்துறையில் இருக்கும் காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

"ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் மதிமுக பொருளாளர் தோழர் செந்திலதிபன் பல்வேறு சான்றுகளுடன் விரிவாக எழுதியுள்ள 'இந்துத்துவப் பாசிசம் வேர்களும் விழுதுகளும்' என்ற தலைப்பிலான புத்தகத்தையும் (அந்த புத்தகத்தின் சிறப்பை எடுத்துக்காட்டி விரிவான அணிந்துரை ஒன்றை நானே எழுதி இருக்கிறேன்), நமது தோழர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் எழுதி, பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள "அர்த்தமற்ற இந்துமதம்" புத்தகத்தையும், இந்துத்துவத்தை தோலுரிக்கும் இன்னும் ஒரு சில புத்தகங்களையும் விற்பனை செய்த நிமிர் புத்தகக் கடையில் காவிக் கும்பலில் ஓரிருவர் பிரச்சினை செய்தார்கள் என்று காரணம் காட்டி, அவர்களைக் கண்டிக்காமல், மாறாக புத்தகக் கடையில் இருந்த தோழர்களிடம் அந்தப் புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என்று காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டினார், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற செய்தி வந்துள்ளது.

இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தொடர்புடைய காவல்துறை ஆய்வாளரையும் மற்றொருவரையும் இடம் மாற்றம் செய்து உடனடியாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதே போல, சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் வகையிலும் மத வெறுப்புடனும் வாட்ஸ் அப்பில் பேசிய சென்னை புளியந்தோப்பு போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி பந்தில் சிக்சர் அடிப்பது போல வாய்ப்பை பயன்படுத்துவோம்.. பாஜக எம்.பிக்களிடம் சொன்ன பிரதமர் மோடி கடைசி பந்தில் சிக்சர் அடிப்பது போல வாய்ப்பை பயன்படுத்துவோம்.. பாஜக எம்.பிக்களிடம் சொன்ன பிரதமர் மோடி

கடந்த ஆட்சி காலங்களில் இந்துத்துவாவினரால் காவல்துறையில் சில காவி ஆடுகள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டிருக்கின்றன. சமூக நீதியும், பாசிச எதிர்ப்பும், மதச்சார்பின்மையும், ஜனநாயகத் தன்மையும் நிலைத்திருக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின், தமிழ்நாட்டு திராவிட மாடல் அரசின் எதிர்பார்ப்புகளுக்கும், கொள்கைகளுக்கும் மாறாக நடந்து கொள்ளும் இத்தகைய அதிகாரிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாடு அரசின் மீது களங்கத்தை உண்டாக்கிட முனையும் எவரையும் அனுமதிக்க முடியாது; கூடாது" என்று கூறியுள்ளார்.

English summary
Dravidar Kazhagam president K. Veeramani has insisted that "the saffron goats in the police should be identified" when there were complaints that the police had threatened not to sell books criticizing Hinduism at the Erode book fair.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக