புதன், 16 ஆகஸ்ட், 2023

நான்குநேரியில் நாம் இந்துகள் - நாம் தமிழர்கள் கள்ள மெளனத்தோடு வேடிக்கை பார்க்கிறார்கள்.

No photo description available.

தோழர் SriRam   : தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை!
இரண்டு கைகளும் கால்களும்  அறிவாள்களால் வெட்டி கிழிக்கப் பட்டுள்ளன.
சினிமாவில்  வரும் "சைக்கோ' - போன்றவர்களால் தான் இது போன்றகொடூரத்தை செய்ய முடியும்.
நெல்லை மாவட்டம் நான்குநேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தை ச் சார்ந்த மாணவன் சின்னதுரையையும்..
அவனது தங்கையையும் இரவு10மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது ஒரு சாதி வெறி பிடித்த சிறார் குழு!
படிப்பில் விளையாட்டில் ஒழுக்கத்தில் திறமையில் அப் பள்ளியில் முன்னுதாரணமாக விளங்கியுளான்  
சின்னத்துரை!
இவரைப் போல இருங்க என ஆசிரியர் பாராட்டியுள்ளார்!
இவனெல்லாம் நமக்கு  மேலயா?


பெருந்தெரு  சாதிப் பய எங்க பேக்க தூக்கிட்டு வா.
பான்பராக் வாங்கிட்டு வா.
பேனா , பேப்பர் வாங்கிட்டு வா.
மிரட்டல் அடி உதை என பல நாட்களாக டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.
அம்மா சத்துணவு பணியாளர்.
அப்பா வேறு மணம் செய்து பிரிந்து வாழ்கிறார்.
தாத்தா வீட்டில் தான் இவனும் அம்மா, தங்கையும் வசித்து வந்துள்ளனர்.
நமக்கு எதற்கு வம்பு இனி நான் ஸ்கூலுக்கு போகல என
அம்மா விடம் சொல்லி அழுதிருக்கிறான் சின்னத்துரை!  
அம்மா வும். தாத்தாவும் பள்ளிக்கு சென்று புகார் அளித்திருக்கிறார்கள்!.
எங்க மேலேயே கம்ளைன்ட் குடுப்பியா இங்க தான வாழனும்,
சின்னத்துரை யையும் வெட்டி விட்டு அருகில் படுத்திருந்த தங்கையையும்
வெட்டி சென்றுள்ளது!
சம்பவத்தை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்!
காவல்துறை வழக்கு பதிந்து தனது கடமையை செய்துள்ளது!
பொதுச் சமூகம் எதுவும் நடக்காதது  போல கடந்து செல்கிறது!
இதற்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!
இதுல கொடுமை என்னான்னா,
திமுக, மதிமுக கட்சிகளின் ஜாதிய ஆதிக்க கட்ட பஞ்சாயத்து தான்.
சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை வீடு புகுந்து கொடூரமாக வெட்டி சென்றதை கண்டித்து உடனே பெருந்தெரு மக்கள் சாலை மறியல் செய்தனர்.
போங்க போங்க ரோட்டை மறிக்காதீங்க;
ஏதோ சின்னபயலுவ வெட்டிட்டானுவ;
எல்லாம் காலையில பேசி தீர்த்துக்கலாம் என்று திமுக, மதிமுக ஒன்றிய செயலாளர்கள் அதிகாரத் திமிரோடு பேசி கட்ட பஞ்சாயத்து செய்ய முயற்சித்த போது காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.

 விடுதலை சிறுத்தைகளின் எதிர்ப்புக்கு பின்னரே அப்பகுதியில் இருந்து நகர்ந்து செல்கிறார்கள்.
ஜாதிய ஆதிக்க சக்திகளின் கூடாரமாக திராவிட கட்சிகள் இருக்கிறது.
ஜாதிய ஆதிக்கத்துக்கு பக்கபலமாக காவல்துறை செயல்படுகிறது.

நாம் இந்துகள் என்பவர்களும், நாம் தமிழர்கள் என்பவர்களும் கள்ள மெளனத்தோடு வேடிக்கை பார்க்கிறார்கள்.  
விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே பாதிக்கபட்ட மக்களோடு களத்தில் நிற்கிறது. ஆதரவு சக்திகளாக இடதுசாரிகள் துணை நிற்கிறார்கள்.
கள ஆய்வு:
தோழர் SriRam
மாவட்டச் செயலாளர்
CPI(M),திருநெல்வேலி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக