ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி! ஜான்சன்ஸ் நிறுவனத்தின் ஊசி மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி

 kamadenu.hindutami: இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து ஒன்றை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் கண்டுபிடித்திருப்பதாகவும்,
அதற்கு அமெரிக்கா சார்பில் அங்கீகாரமும், அனுமதியும் கிட்டியிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடலைப் பாதிக்கும் தீரா நோய்களில், மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது.
அந்த புற்று ரகங்களில் மிகவும் கொடிது இரத்தப்புற்று. உடலின் அவயங்கள் எதிலேனும் புற்றுநோய் அதன் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணப்பட்டால், முழுவதுமாக குணப்படுத்தும் வகையில் நவீன மருத்துவமும் மருந்துகளும் முன்னேற்றம் கண்டுள்ளன.


சற்றே முற்றிய நிலையில் புற்று கண்டறியப்பட்டாலும், அறுவை சிகிச்சை வாயிலாக மீளவும் வாய்ப்புகள் மிச்சமிருக்கின்றன.
ஆனால், உடலெங்கும் விரவிப் பாயும் இரத்தத்தில் புற்று பாதித்தால், அதனை குணப்படுத்துவதில் நவீன மருத்துவ முறைகள் திணறல் கண்டு வருகின்றன.
அதற்கும் விடிவு கண்டிருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தனது புதிய மருந்து கண்டுபிடிப்பினை முன்வைத்துள்ளது. பாதிப்புக்கு ஆளான புற்று செல்களையும், நோயெதிர்ப்பு செல்லையும் ஒருங்கிணைப்பதன் வாயிலாக, புற்றிலிருந்து மீளும் மருத்துவ சூத்திரத்தின் அடிப்படையில் புதிய மருந்தினை இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

தோலுக்கு அடியில் ஊசி மூலம் செலுத்தக்கூடிய இந்த மருந்தினை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செலுத்திக் கொள்வதன் மூலம் ஆரம்ப கட்ட இரத்தப் புற்று நோயிலிருந்து விடுபடலாம் என்கிறது ஜான்சன்ஸ் நிறுவனம்.

இந்த மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post Views: 8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக