வெள்ளி, 28 ஜூலை, 2023

மணிப்பூர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு- திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

 மாலை மலர்  :   மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அடைய வைத்தது.
காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய், வந்தனா சௌஹான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளன.
 மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அடைய வைத்தது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.


இந்நிலையில், I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் குழு வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் செல்ல உள்ளது.
எதிர்க்கட்சிகள் குழுவில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய், வந்தனா சௌஹான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக