சனி, 29 ஜூலை, 2023

பத்ரி ஷேஷாத்ரி அதிரடி கைது..!

 zeenews.india.com : Yuvashree கும்பகோணத்தில் பிறந்து பல புத்தகங்களை எழுதி பிரபலமானவர், பத்ரி ஷேஷாத்ர. இவர், சென்னையில் வசித்து வருகிறார். மணிப்பூர் கலவரம் குறித்து சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு நேர்காணல் கொடுத்திருந்தார்.
இந்த நேர்காணலில் அவர் கூறிய கருத்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் சர்ச்சை,  

மும்பை: குற்றத்  தலைக்நகரம் போன்ற புத்தகங்களை எழுதி பிரபலமானவர் பத்ரி ஷேஷாத்ரி.
புத்தகங்கள் எழுதுவது மட்டுமன்றி, இவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் அவ்வப்போது கருத்துகளை சமுக்க வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இவரது கருத்துகள் மக்களிடையே பகிரப்பட்டு பெரும் சர்ச்சையாக மாறுவதுண்டு.
அவர் அப்படி மணிப்பூர் கலவரம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியதால் தற்போது போலீஸாரின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார்.
சர்ச்சை கருத்து:



கடந்த 150 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டுள்ளனர். இந்த கலவரம் குறித்து எழுத்தாளர் பத்ரி ஷேஷாத்ரி ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியது பற்றி பேசியிருந்தார். இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது.

கைது:

பத்ரி ஷேஷாத்ரி இன்று போலீஸாரால் மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் இவரது கருத்து அமைந்துள்ளதாக கூறி IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளனின் கீழ் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்ணாமலை கண்டனம்:

பத்ரி ஷேஷாத்ரியின் கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அண்னாமலை, “தமிழக காவல்துறையின் இந்த செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது..” என குறிப்பிட்டுள்ளார்.

    புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு @bseshadri அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை @BJP4TamilNadu வன்மையாகக் கண்டிக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக