சனி, 29 ஜூலை, 2023

திருவனந்தபுரம்: முதியவரை உல்லாசத்திற்கு அழைத்து ரூ 11 லட்சம் பணம் பறித்ததாக நடிகை நித்யா சசி கைது செய்யப்பட்டுள்ளார்.

zeetamil : கேரள மாநிலம், திருவனந்தபுரம் பட்டம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர். 75 வயதான இவர் கேரள மாநிலத்தில் பல்கலைக்கழக ஊழியராகவும் இருந்து வருகிறார். இவர் கொல்லம் பரவூரில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்துள்ளார்.
அந்த விளம்பரத்தில் முதியவர் தனது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார். அந்த செல்போன் எண்ணுக்கு கடந்த மே மாதம் ஒரு பெண் பேசியுள்ளார். தனக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டுள்ளார்.

வீடு வாடகைக்கு விடுவது தொடர்பாக அந்த பெண் அடிக்கடி முதியவரிடம் பேசியுள்ளார், அப்படி பேசும் போது அவர் ஆசை வார்த்தைகளை பேசி முதியவருடன் நட்பாக பழகியுள்ளார்.



ஒவ்வொரு முறையும் பேசும் போது அந்த பெண் முதியவர் மீது அக்கறையுடனே பேசினார். இந்த நிலையில் அந்த முதியவரை கொல்லம் பரவூரில் உள்ள தன்னுடைய வீட்டில் தனியாக சந்திக்கலாம் என சொல்லியுள்ளார்.

மேலும் அங்கு உல்லாசமாக இருக்கலாம் என்றும் முதியவரிடம் கூறியுள்ளார். இதனால் துள்ளிக் குதித்த முதியவர், அந்த பெண்ணை சந்திக்க உற்சாகமாக சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதியவரிடம் நைசாக பேசி அவரை நிர்வாணமாக்கி, அந்த பெண்ணும் அவரும் நிர்வாணமாக நிற்பது போல் முதியவருக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் ஒரு ஆண் அந்த இடத்திற்கு வந்ததால் முதியவர் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது அந்த நபர் அந்த முதியவரிடம் போட்டோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்த வீடியோவையும் காட்டியுள்ளார். இதை சமூகவலைதளங்களில் போடாமல் இருக்க ரூ 25 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

தனது நிர்வாண புகைப்படம் வெளியானால் அவமானமாகிவிடுமோ என கருதிய அந்த முதியவர் ரூ 11 லட்சம் கொடுத்துள்ளார்.

அதை வாங்கிக் கொண்ட அந்த ஆணும் பெண்ணும் மேலும் 25 லட்சம் கொடுக்க வேண்டும் என மீண்டும் மிரட்டியுள்ளனர்.

இதனால் வேறு வழியில்லாமல் போலீஸுக்கு முதியவர் போய் அங்கு புகார் அளித்துள்ளார். அப்போது முதியவரை மிரட்டி பணம் பறித்தவர்கள் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த மலையாலப்புழா பகுதியை சேர்ந்த டிவி சீரியல் நடிகை நித்யா சசி, கொல்லம் பரவூரை சேர்ந்த பினு என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை நைசாக வரவழைத்து பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். அந்த முதியவரை பணம் ரெடியாகிவிட்டதாக கூறி அவர்களை வரவழைக்குமாறு போலீஸார் தெரிவித்தனர்.

அதன்பேரில் நித்யா சசி மற்றும் பினுவிடம் முதியவர் தொலைபேசியில் பேசி பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அப்போது முதியவர் அழைத்த இடத்திற்கு வந்த நடிகையையும் ஆண் நண்பரையும் அங்கிருந்த போலீஸார் மடக்கி பிடித்தனர்.

ஹனிடிராப் முறையில் முதியவரிடம் ரூ 11 லட்சம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பங்கள் மூலம் மோசடி நடத்தி வந்த நிலையில் இது போல் முதியவர்களை குறி வைத்து அவர்களை சபல வலையில் விழவைத்தும் பண மோசடிகள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக