வெள்ளி, 16 ஜூன், 2023

ஆ.ராசா MP! : ஒரு அமைச்சரை முடக்கினால் தாமரை மலர்ந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

 Kalaignar Seithigal - Lenin : ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அராஜக முறையில் கைது செய்துள்ள பா.ஜ.க வின் ஜனநாயக விரோத மக்கள் விரோத பழிவாங்கும் எதேச்சதிராக நடவடிக்கைகளைக் கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.


இந்த கூட்டத்தில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கே.எம்.காதர்மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா எம்பி, இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், மதச்சார்பற்ற கொள்கைகளைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என் பீகார் முதலமைச்சர் நித்தீஷ் குமார் தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தில் தி.மு.கவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இதனால்தான் அமலாக்கத்துறையைக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒன்றிய பா.ஜ.க அரசு கைது செய்துள்ளது.

கலைஞரின் நூற்றாண்டு அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறும் அந்த கூட்டத்தைத் தமிழ் நாட்டின் முதலமைச்சர் தலைமை தாங்குவார். இதில் பிரதமர் இருப்பார். 10க்கும் மேற்பட்ட ஒன்றிய அமைச்சர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து கலந்துகொள்வார்கள். அப்போது இந்தியாவிலேயே மோடி, அமித்ஷாக்கள் இருக்க மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வேல்முருகன், "அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஒன்றிய அரசு அடக்குமுறைகள் ஏவியுள்ளது. சோதனையில் போது அமலாக்கத்துறை உடை மாற்றக்கூட அனுமதி வழங்கவில்லை.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்று வணக்கம் போடும் கூட்டம் இங்கு இல்லை. இது தமிழ்நாடு. அமலாக்கத்துறையை மாநிலக் காவல்துறையைக் கொண்டு தடுத்து இருக்க முடியும். ஆனால் முதலமைச்சர் அப்படி செய்ய வில்லை.

பழைய தி.மு.கவினராக இருந்தால் இப்படி அண்ணாமலை பேச முடியுமா?. அண்ணாமலை மற்றும் அமித்ஷா கும்பல்களின் வால்கள் ஒட்ட நறுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக