மாலைமலர் : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய ரோஜா ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமாக இருக்கிறார்.
சென்னையில் உள்ள வீட்டில் நேற்று இரவு தங்கியிருந்த அமைச்சர் ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. வலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரோஜாவின் கால் வீக்கத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ரோஜாவின் கால் வீக்கத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதற்காக மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு ரோஜாவின் கால் வலி குறைந்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அவர் விரைவில் விடுதிரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக