tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ரெய்டில் தமிழ்நாட்டின் தலைமை செயலகத்திலேயே ரெய்டு நடத்துவதற்கு பின் 3 முக்கியமான காரணங்கள் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசியலையே குலுக்கிய சம்பவம் ஒன்று இன்று தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடந்து உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடக்கிறது.
வீட்டோடு சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
அமைச்சர் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அவரின் வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை ஒவ்வொரு இடங்களிலும் சோதனை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த ரெய்டுகள் காரணமாக தலைமை செயலகம் பரபரப்பில் உச்சத்தில் இருக்கிறது.
ஜெயலலிதா இறந்த பின் சென்னையில் அதிமுகவினர் வீடுகளில் நடந்த ரெய்டில்.. தலைமை செயலக ரெய்டும் முக்கியம் ஆனது. அதன்பின் மீண்டும் தற்போது ஸ்டாலின் ஆட்சியில் தலைமை செயலகத்தில் ரெய்டு நடக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ரெய்டில் தமிழ்நாட்டின் தலைமை செயலகத்திலேயே ரெய்டு நடத்துவதற்கு பின் 3 முக்கியமான காரணங்கள் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம் 1 - ஆளுநர் - செந்தில் பாலாஜி மூவ்: அதன்படி சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜி குறித்து புகார் கொடுத்தார். அமைச்சர் செந்தில் இருந்து நீக்க பாலாஜியை வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்தார். அதேபோல் அண்ணாமலையும் செந்தில் பாலாஜிக்கு எதிராக இதேபோல் புகார் கொடுத்தார்.
இதில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக அண்ணாமலை பேட்டியும் கொடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு உள்ள நிலையில் அவர் அமைச்சராக தொடர்ந்தால் சரியாக இருக்காது என்று ஆளுநர் கருதியதாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக செந்தில் பாலாஜிக்கும் ஸ்டாலினுக்கும் பிரஷர் கூடி உள்ளது.
காரணம் 2 - அதிகாரிகள் மீது தாக்குதல் - டெல்லி கோபம்: கடந்த முறை வருமான வரித்துறை ரெய்டின் போது ரெய்டு நடக்கும் இடங்களில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக போர்கொடி தூக்கி போர்த்தடம் செய்தனர்.
முக்கியமாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதத்தில் திமுக நிர்வாகியை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கி உள்ளனர். திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து.. உன் ஐடி கார்ட் காட்டு.. நீ போய் ரெய்டு பண்ணு.. ஆனா அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு போ.. உங்க வீட்டு ஆம்பளைய இப்படித்தான் அடிப்பியா, என்று கேட்டுள்ளார் கவிதா கணேசன். இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரில் திமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் சில வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் புகார் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு போலீசிடம் தெரிவிக்காமல் வந்ததே பாதுகாப்பு குறைப்பாட்டிற்கு காரணம் என்று அப்போது திருப்பூர் எஸ்பியும் விளக்கம் கொடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த முறை மத்திய துணை ராணுவ படை வீரர்கள் கடைசி நேரத்தில் வந்து ரெய்டு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். இதை டெல்லி விரும்பாத நிலையிலேயே லேட்டாக நடத்தப்பட வேண்டிய அமலாக்கத்துறை ரெய்டு உடனே நடத்தப்பட்டு உள்ளதாம்.
காரணம் 3 - மின்சாரம் இல்லை - அமித் ஷா கோபம்: சமீபத்தில் சென்னை விமான நிலையத்துக்கு அமித்ஷா வந்தவுடன் ஒரு பகுதியாக மின்சாரம் தடைபட்டது. அவர் காரில் தொண்டர்களுக்கு கை காட்டிக்கொண்டு இருந்த போது மின்சார தடை ஏற்பட்டது. 15 நிமிடம் அங்கே மின்சார தடை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினரின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பாஜகவினர் பலரின் முகங்கள் இதனால் சுருங்கியது.
இப்படி அமித் ஷா வந்த போதே மின்சாரம் சென்றது செந்தில் பாலாஜியின் சேட்டை என்று பாஜக கருதி இருக்கிறதாம். இதனால் அமித் ஷா, பாஜகவினர் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் லேட்டாக நடத்தப்பட வேண்டிய அமலாக்கத்துறை ரெய்டு உடனே நடத்தப்பட்டு உள்ளதாம்.
திமுகவை வீக்காக காட்டும் ரெய்டு: மேலும் ஸ்டாலின் இருக்கும் போதே தலைமை செயலகத்திலேயே ரெய்டு விட்டோம் பார்த்தீர்களா என்று ஸ்டாலினையும், அரசையும் வீக்காக காட்டும் முடிவில் இப்படி டெல்லி தலைமை செயலகம் உள்ளேயே ரெய்டு விட்டதாக கூறப்படுகிறது.
இது போன்ற ரெய்டுகள் இப்போதைக்கு முடியாது.. கண்டிப்பாக லோக்சபா தேர்தல் வரை தொடரும் என்று டெல்லி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக