வியாழன், 11 மே, 2023

பிரான்சின் உயரிய விருதை பெற்ற தமிழ் பிரெஞ்சு படைப்பாளி திருமதி மதன கல்யாணி CHEVALIER MADANAKALYANI அவர்கள் காலமானார்

Puducherry Mathana Kalyani got Chevalier honor well before Kamal Hassan
tamil.oneindia.com y Veera Kuma : பிரெஞ்சு அரசின் உயரிய 'செவாலியர்' விருதை சிவாஜி, கமல் ஆகிய இரு தமிழர்கள்தான் பெற்றுள்ளதாக பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஆனால் கமலுக்கு முன்பே தமிழ் பேராசிரியர் ஒருவருக்கு பிரெஞ்சு அரசு இந்த விருதை வழங்கியது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆனால், கமலுக்கு பல வருடங்கள், முன்பே தமிழ் பெண்மணி ஒருவர் இந்த விருதை பெற்றார் என்பதை அனைத்து தரப்புமே கவனிக்க தவறிவிட்டது. அந்த பெண்மணி பெயர் மதன கல்யாணி.
1995ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, பிரான்ஸ் அரசு, செவாலியர் விருது அறிவித்தபோதுதான், அதன் கவுரவம் குறித்து தமிழர்கள் பலருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கும் செவாலியர் விருதை அறிவித்துள்ளது
பிரான்ஸ் அரசின் கலாசாரத்துறை. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவாஜிக்கு பிறகு, செவாலியர் விருது பெறும் 2வது தமிழர் கமல் என முன்னணி நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன.
ஆனால், கமலுக்கு பல வருடங்கள், முன்பே தமிழ் பெண்மணி ஒருவர் இந்த விருதை பெற்றார் என்பதை அனைத்து தரப்புமே கவனிக்க தவறிவிட்டது.
அந்த பெண்மணி பெயர் மதன கல்யாணி.
புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியில் 41 ஆண்டுகாலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்தான், மதன கல்யாணி.
பிரெஞ்சு மொழியி்ல் முதுகலையும், தமிழில் புலவர் பட்டமும் பெற்று, இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர்.
இந்த அறிவை கொண்டு, இரு மொழிகளிலும் 20க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். 'புதுச்சேரி நாட்டுப்புற கலைகள்', சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆகிய நூல்களை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
இவரது பணிகளை பாராட்டியே செவாலியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், செவாலியர் விருதைவிட கவுரவம்மிக்கது 'ஒபிசியே' விருது.

இந்த விருதையும் பிரான்ஸ் அரசு மதன கல்யாணிக்கு கொடுத்துள்ளது.
இவ்விருதை பெற்ற முதல் இந்திய பெண் மதன கல்யாணிதான் என்பது தமிழினத்தின் பெருமை. அதை தெரியாமல் இருந்தது தமிழனின் அறியாமை.
இந்த "செவாலியே" விருதும் அதை விட உயர்ந்த விருதான "ஒபிசியே" விருதும் பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துக்கொடுத்த திருமதி மதன கல்யாணி அவர்கள்  இன்று  (10 May 2023) புதுச்சேரியில் காலமாகிவிட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக