சனி, 6 மே, 2023

தந்தை பெரியாரே புதுமைப்பெண்ணை உருவாக்கினார் .. பாரதி உருவாக்கியது கண்ணம்மாவைத்தான்!

May be an image of 3 people

Loganayaki Lona :  பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வாழ வாழ்த்தும் கம்யூனிஸ்டுகளே!
பாரதி வாழ்நாளில் புதுமைப்பெண்ணை உருவாக்கவும் இல்லை,பார்க்கவும் இல்லை.கண்ணம்மாவே வாழ்நாள் அடிமை வாழ்க்கைக்கு  ஒரு சாட்சி..
இது தமிழ்நாடு இங்கு உருவாகியிருக்கும் அனைத்து புதுமைப்பெண்ணும் திராவிடத்தின் வார்ப்புகள்.தந்தை பெரியார் களம் கண்டு போராடி தன் வாழ்நாளில் பல புதுமைப்பெண்களை உருவாக்கி பார்த்து விட்டு மறைந்த நாடு.
இங்கு கனவு கண்டவர்களையும்,கவிதை எழுதியவர்களையும் வைத்து பெண்களை வாழ்த்துவது அரசியல்படுத்தப்பட்டவர்களின் அரசியல் நேர்மையற்ற செயல்.
கோவிலுக்கு சென்று கொண்டிருந்த தன் இணையரை,தன் சகோதரியை கள்ளுக்கடை மறியல்  போராட்ட களத்திற்கு தலைமையாக்கியவர் தந்தை பெரியார்.


மழலைத்திருமணத்தில் விதவையான இராஜாஜி மகளுக்கு மறுமணம் செய்து வாழ வைத்தவர் பெரியார்.
தேவதாசி ஒழிப்புச்சட்டம் விவாதகளமாக்கியதும்,நிறைவேற்ற தூண்டுகோலும் பெரியார்
மணியம்மை பெரியாரிடமிருந்து  இராவணலீலா போராட்ட தலைமையாக,இயக்க தலைவராக  தானே கற்று  உருவான போராளிப் பெண்.
இணையருக்கு தாலி கட்ட வைத்து திருமணத்தில்  ஓர் புரட்சி பெண்ணை தன் காலத்தில் உருவாக்கினார்.
தாலி மறுத்த பெரியார் தேவதாசிபெண்ணுக்கு தாலிஅணிவித்து திருமணம் நடத்தினார்.அங்க அது தான் செய்ய வேண்டிய புரட்சி.
"குடி அரசு ",Revolt பத்திரிக்கையில் பெண்  எழுத்தாளர்களை நிர்வாகிகளாக வைத்தார்.
டீச்சர் வேலைக்கு பெண்ணை  மட்டும் தான் நியமிக்க கேட்பேன்னு  கேட்டவர் வேறு யார்?
நாங்களாம் சுதந்திரமான ராணியாகனும்னு நினைத்தவர் வேறு யார்?
பெண் அடிமை விலங்கான குடும்ப அமைப்பின்  மறுகட்டமைப்பை தன் தோழர்களின்  ஒவ்வொரு திருமணத்திலும்  கட்டிக்காட்டிவிட்டு சென்ற தலைவர் எவரேனும் உண்டா?
அக்கால திராவிடப்பெண்கள்,அரசியல் பெண்கள்  பெரியார் என சிறப்பித்த ஒரே நபர் அவர் மட்டும் தான்.மற்ற பெண்ணிய கவிஞர்கள் ஏட்டோட சரி..எங்கள் மீட்சிக்கு  என்ன செய்தனர்?
லோகநாயகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக