வெள்ளி, 26 மே, 2023

ஐ.டி. ரெய்டு: அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர்!


மின்னம்பலம் : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் திமுகவினர் ஈடுபட்டு காரை சேதப்படுத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று(மே 26) காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.


அவருக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு, சென்னையில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

    கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம்.
இந்நிலையில், கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனையிட சென்ற போது,

வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையிலான திமுகவினர் ‘ஐடி கார்டு’ காட்டச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் அங்கு நின்ற அதிகாரிகளின் கார் கண்ணாடியும் கம்பியால் குத்தி உடைக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக