சனி, 6 மே, 2023

சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?: ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கே

சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?: ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி!

Kalaignar Seithigal  - Lenin  :  தமிழ்நாடு சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?
ஆளுநர் கூறுவது போல சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் மற்றும் ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு," கொளத்தூர் - வில்லிவாக்கம் பகுதியை இணைக்கும் மேம்பாலம், சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை இணைந்து ரூ. 71 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.
ஸ்டீபன்சன் பாலம் 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என முதல்வர் சொன்னது மட்டும் இல்லாமல் மூன்று முறை ஆய்வு செய்துள்ளார்
ஒரு மாதத்தில் இந்த பணி முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த ஆட்சியில் ரூ.4,225 கோடியில் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் மட்டுமே கோயில் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் 6 பா.ஜ.க நிர்வாகிகளிடம் இருந்தும் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஆளுநர் கூறுவது போல சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை. சட்ட மீறல், விதிமீறல் நடந்தால் அது சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா? சிதம்பரம் தீட்சிதர்களுக்கு என தனிச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ளாரா?.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆகவே விதிமீறல் எங்கு நடைபெற்றாலும் அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் என்பவர் ஆண்டவரா? எங்களைப் பொறுத்தவரை ஆளுநர் நாட்டிற்குத் தேவை இல்லை. ஆளுநரே பல நேரங்களில் முதல்வரைப் பாராட்டி உள்ளார். ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கொள்வார்." என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக