சனி, 13 மே, 2023

கர்நாடகத்தில் காங்கிரஸ்.. முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறும் 5 முக்கிய வாக்குறுதிகள் (மகளிர் இலவச பேருந்து பயணம் உட்பட )

கலைஞர் செய்திகள் - Lenin : கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 137 இடங்களிலும், பா.ஜ.க 62 இடங்களிலும், ஜனதா தளம் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.
கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்.. முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறும் 5 முக்கிய வாக்குறுதிகள்


கர்நாடகத்தில் ஆட்சியை இழந்துள்ளதால் தென்னிந்தியாவில் இருந்த ஒரு மாநிலத்தையும் பா.ஜ.க இழந்துள்ளது. தென் மாநிலங்களில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என பா.ஜ.க தலைவர்கள் கூறிய நிலையில் தற்போது தென் மாநிலத்தில் பா.ஜ.க முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உதவியதாக கருதப்படுகிறது. மேலும் கர்நாடகாவின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்.. முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறும் 5 முக்கிய வாக்குறுதிகள்

அந்த ஐந்து முக்கிய வாக்குறுதிகள் என்ன?

1. கிரகஜோதி என்ற திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்

2. கிரகஷ்மி என்ற திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

3. அன்ன பாக்யா என்ற திட்டத்தின் அடிப்படையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

4. யுவநிதி என்ற அறிவிப்பின் கீழ் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயும், வேலையில்லா டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும்.

5. சக்தி திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களும் மாநிலத்தின் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக