புதன், 12 ஏப்ரல், 2023

BURQA 105 வருட தமிழ்ச் சினிமா வரலாற்றில் யாருமே தொடத் தயாராக இருக்காத மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட.. ------

 Rishvin Ismath  :    'புர்கா'   அது பெண்களை மூடிவைக்கும் ஆடையின் பெயர் மட்டுமல்ல, மூன்று நாட்களுக்கு முன் வெளியாகிய ஒரு புரட்சித் தமிழ்த் திரைப்படத்தின் பெயர் கூட அது தான்.
'புர்கா' திரைப்படம் AHA OTT யில் கிடைக்கின்றது. ( https://www.aha.video/player/movie/burqa )
..105 வருடகால தமிழ்ச் சினிமா வரலாற்றில் இதுவரை யாருமே தொடக் கூடத் தயாராக இருக்காத மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ஒரு பெரும் பரப்பிற்கான வாயிலை மிக அழகாகவும், அமைதியாகவும், நிதானமாகவும் திறந்து விட்டிருக்கின்றது 'புர்கா'. 'புர்கா' தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு புரட்சி என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.
. 'புர்கா' என்று ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது என்று திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு எழுதிவிடக் கூடாது என்பதில் எல்லா விதமான இஸ்லாமியவாதிகளும் ஒற்றுமைப் பட்டிருப்பது போலத் தோன்றுகின்றது. போஸ்ட்டரையும், ட்ரெய்லரையும் பார்த்துவிட்டு படத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் தான் முஸ்லிம் சமூகத்தை "படத்தைப் பார்த்துவிடாதே" என்று எச்சரித்துப் பதிவு எழுதுகின்றார்களே தவிர இவர்கள் யாரும் இதுவரை படத்தைப் பார்க்கவில்லை. யாரோ சொல்லிக் கொடுத்தது போல படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதில் இஸ்லாமியவாதிகள் படு கவனமாக இருக்கின்றார்கள்.


.
.முஸ்லிம்களே, படத்தில் என்ன இருக்கின்றது என்று கூடப் பார்க்காத இஸ்லாமியவாதிகளின் அரைவேக்காட்டு அறிவுறுத்தலுக்கு அடிபணியாமல் தைரியமாகப் படத்தைப் பாருங்கள், படத்தைப் பார்த்தபின் உங்களுக்குள் ஏற்படும் சிந்தனை மாற்றத்தை “எனக்கு நீங்க சொல்ல வேண்டாம், அட்லீஸ்ட் உங்களுக்காவது நீங்க சொல்லிக் கொள்ளுங்க”.
..
தீவிரவாதிகளாக, குண்டு வைப்பவர்களாக, தேசத் துரோகிகளாக முஸ்லிம் பெயர் கொண்ட கதாபாத்திரங்களைச் சித்தரித்துத் திரைப்படங்கள் வந்தால் அவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யும் இஸ்லாமியவாதிகளால், முஸ்லிம்களை நல்லபடியாகச் சித்தரித்தும், கோளாறு எங்கே இருக்கின்றதோ அதை மட்டும் எடுத்துக் காட்டியும் ஒரு திரைப்படம் வந்தால் எப்படித்தான் ஜீரணித்துக் கொள்ள முடியும்? 'புர்கா'வை எதிர்க்கவும் முடியாது, ஆதரிக்கவும் முடியாது, ஆகவேதான் படத்தின் பெயரைக் கூடச் சொல்லாமல் "ஐய்யோ படத்தைப் பார்த்துவிடாதே" என்று அலறுகின்றார்கள் இஸ்லாமியவாதிகள்.
..
தான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காது என்பது தெரிந்ததும் “எனக்கு நீங்க சொல்ல வேண்டாம், அட்லீஸ்ட் உங்களுக்காவது நீங்க சொல்லிக் கொள்ளுங்க” என்கின்ற சூர்யாவின் வசனமும், “உண்மையாவே நீங்க நேர்சிங் தான் படிச்சீங்களா?” என்று தனது கத்திக் குத்துக்கு மருந்து போட்ட நார்சிடம் சுள்ளெனக் கேட்பதும் நிறையவே சிந்திக்க வைக்கின்ற வசனங்கள்.
..
105 வருட தமிழ்ச் சினிமா வரலாற்றில் புர்கா ஒரு ஆபசமில்லாத நிர்வாணம், பேசப்படாமல் மறைந்து, புதைந்து கிடந்ததை திரையில் கொண்டு நிறுத்திய துணிகரம். அது கிழித்துப் போட்ட துணிகள் ஒவ்வொன்றும் அழுக்குத் துணிகள்.
.
.ஒவ்வொரு முஸ்லிமும் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அறிவூட்டும் திரைப்படம்.
...
கடைசியாக, அன்வர் சூட்கேசில் எடுத்து வைக்கச் சொன்ன அந்த டீசேர்ட் ஐப் போட்டுக்கொண்டு அந்தப் பெண் தெருவில் தூரத்தில் நடந்து போவதையும் காட்டியிருக்கலாம். யார் அன்வர், அந்தத் டீசேர்ட் இற்கு என்ன முக்கியத்துவம் என்று படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள், no spoilers.
..
"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே".
'புர்கா' கேள்வி கேட்டிருக்கின்றது, "எனக்கு நீங்க பதில் சொல்ல வேண்டாம், அட்லீஸ்ட் உங்களுக்காவது நீங்க சொல்லிக் கொள்ளுங்க”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக