சனி, 1 ஏப்ரல், 2023

கன்னியாகுமரி வசந்தகுமாரிக்கு பின் இத்தனை வருடம் கழித்து கோவையில் இரண்டாவது பெண் ஓட்டுனர்.

May be an image of 10 people and people sitting

Ovia Rajamoni :  கோவை நகரில் ஒரு பெண் பேருந்து ஓட்டுனர் பணியில் நியமிக்கப் பட்டிருக்கிறார்.  வாழ்த்துகள்.  
சில நாளேடுகள் இவர்தான் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என்று செய்தி வெளியிடுகிறார்கள்.  
ஒரு முப்பதாண்டுகளுக்குள் உள்ள செய்திகள் கூட தெரியாமல் செய்தியாளர்களாம்.  
நாளிதழ்களாம்.  சரி.  அதை விடுங்கள்.  
பல முகநூல் பதிவர்கள் இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தகுமாரி கன்னியாகுமரி மாவட்டத்தில் நியமிக்கப் பட்டார் என்பதை பதிவிட்டவர்கள் கவனமாக அதற்காக மகளிர் விடுதலை மன்றம் நாகர்கோவிலும் தமிழினப் பெண்கள்  விடுதலை இயக்கமும் 3 ஆண்டுகள் வீதியிலிறங்கி் போராடியதை நன்கு தெரிந்தவர்கள் அதனைக் கவனமாக தவிர்த்து அச்செய்தியைத் தெரிவிக்கிறார்கள்.  


அடடா என்ன கவனம்... என்ன கவனம்.   
மகளிர் விடுதலை மன்றத்தில் அன்று போராட்டத்தில் நேரிடையாகக் கலந்து கொண்ட தோழர் விஜி மட்டும் எங்கள் முதல் போராட்டத்தைப் பதிவு செய்து இரண்டாவது பெண் பேருந்து ஓட்டுனருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.  

அடுத்துத் தோழர் அரசெழிலன் பதிவிட்டிருக்கிறார்.  
இவர்கள் இருவரும் இன்றும் புதியகுரல் அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள்.  
 உண்மையில் இதே சமுதாயப் போக்கினால்தான் வசந்தகுமாரியைத் தொடர்ந்து அடுத்து அப்பணிக்கு தயாராக இருந்த புஸ்பா மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அன்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு தொடர்ந்து போராட முடியாமல் போனது.  

வசந்தகுமாரி முதல் பெண் பேருந்து ஓட்டுனராக நியமிக்கப் பட்ட போது அன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அதனை ஆண்களை பொறாமைப் பட வைக்கும் வெற்றி என்று குறிப்பிட்டிருந்தது.
 இன்று நினைத்துக் கொள்கிறேன்.  இத்தனை வருடம் கழித்து இரண்டாவது பெண் ஓட்டுனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக