வெள்ளி, 14 ஏப்ரல், 2023

அண்ணாமலைக்கு பணம் செலுத்தும் ஆருத்ரா; காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்வீட்

நக்கீரன் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு காயத்ரி ரகுராம் மரியாதை செலுத்தினார்
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதிதாக எதையோ ஒன்றை பேசுவது போல் அண்ணாமலை பேசுகிறார். மக்களுக்கு எல்லாமே தெரிந்த ஒரு விஷயம்.
இவை அனைத்தும் நீதிமன்றங்களில் உள்ள விஷயம்.
குற்றச்சாட்டுகளை மட்டுமே எடுத்து வைப்பது சரியென்று படவில்லை.
திமுக ஃபைல்ஸ் என்று போட்ட வீடியோவில் திமுகவின் குடும்ப உறுப்பினர்களின் படங்களை போடுவேன் எனக் கூறினார்.
எம்எல்ஏ, எம்பியாக பொறுப்பில் இல்லாதவர்களின் படங்களையும் போடுவது தவறாகப்படுகிறது.


பாஜகவிலிருந்து விலகியதிலிருந்து மிரட்டல் இருக்கத்தான் செய்கிறது.

போன் செய்து மிரட்டுவார்கள். அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நல்ல அரசாங்கமும் நல்ல காவல்துறையும் உள்ளது. இதுவரை பாதுகாப்பு அளித்து வருகிறது. அண்ணாமலை புதிதாக வந்தபொழுது கட்சிக்கான வளர்ச்சி என்று தான் நினைத்தோம். இப்போது வீழ்த்திக்கொண்டு செல்கிறார். கூடிய விரைவில் அவர் மேல் நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் நல்லது” எனக் கூறினார்.

இந்நிலையில், அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அண்ணாமலை பார்த்து பொறாமைப்படப் போகிறீர்களா? அல்லது நடவடிக்கை எடுத்து நிரூபிக்கப் போகிறீர்களா? மீதி 1 லட்சம் கோடி எங்கே, 2.5 லட்சம் கோடி என்று திமுக அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டு சொன்னீர்கள். அதிமுக ஊழலையும் கொண்டு வருவேன் என்று சொன்னீர்கள். நீங்கள் ஒரு கோமாளியாக மாறியது எவ்வளவு சோகமான முடிவு. அரை குறை அறிவினால் அனைத்து செயல்களும் அரை குறை தான் போல.

விருகம்பாக்கத்தில் அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இல்லம் மிகவும் எளிமையானது. அவர் அமைச்சரான பிறகும் பாதுகாப்புக்காக வீட்டை மாற்றவில்லை. ஆனால் Z பிரிவு பாதுகாப்புக்காக உங்கள் 3.5 லட்சம் வாடகை வீட்டை மாற்றியுள்ளீர்கள் என்பது வெட்கக்கேடானது. (உதாரணமாக ஆருத்ரா நிறுவனம்) போன்ற நண்பர்கள் பணம் செலுத்துவதால், சொகுசு கடிகாரம் மற்றும் கடற்கரைக்கு அடுத்துள்ள சொகுசு வீடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள். நண்பர்கள் மூலம் மாதச்செலவு 8 லட்சம். இதற்கு உங்களிடம் பணம் இல்லையென்றால்? பிறகு எப்படி ரஃபேல் வாட்ச் வாங்க உங்களிடம் பணம் வந்தது? முதல் தலைமுறை அரசியல்வாதி ஏன் இவ்வளவு ஆடம்பரம்.. எப்படி காமராஜருடன் ஒப்பிடலாம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக