செவ்வாய், 25 ஏப்ரல், 2023

நாசி வதை முகாம்களாகும் பாடசாலைகள் – யாழில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை !

 தேசம்நெட் : தந்தை, உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் வசித்து வந்த, குறித்த மாணவனே நேற்று (24) இரவு இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .
குறித்த மாணவனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தந்தையால் உடனடியாக காலணியை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையிலேயே மாணவன் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
மாணவனது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களின் தற்கொலைகளும் – தற்கொலை முயற்சிகளும் நமது சமூகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்வதை காணமுடிகின்றது.
இந்த பாடசாலை மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பாடசாலைகளே செயற்பட வேண்டியவை. பாடசாலைகளில் வெறுமனே பாடப்புத்தகங்களை மட்டுமே கொடுத்துவிட்டு 2 மணிவரை மாணவர்களை சிதிரைவதை செய்யும் நாசி முகாம்களாக மாறியுள்ளன
இந்த பாடசாலைகள். மாணவர்களின் குடும்ப வறுமை,தனிப்பட்ட பிரச்சினைகள் இவையெல்லாம் கேட்பதற்கே பாடசாலை சமூகத்திற்கு நேரம் இல்லை.
தென்னிலங்கை பாடசாலைகளில் மாணவர்களின் உளவியல் ரீதியான விடயங்களை கண்காணிக்க தனிப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,
 எமது பகுதிகளில் சில பாடசாலைகளிலே உளவியல் ஆசிரியர்களை காணமுடிகின்றது.

கல்வி ஒரு மாணவனுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும் – சவால்களை கற்றுக்கொடுத்து அவற்றை வினைத்திறனாக எதிர்கொள்ளும் முறை பற்றி எல்லாம் கற்பிக்க வேண்டும்.
இதையெல்லாம் எந்த பாடசாலையுமே கற்பிப்பதில்லை. மாறாக ஏட்டுக்கல்வியை வலிந்து திணித்துக்கொணடிருக்கிறார்கள்.

இலங்கை எதிர்கொள்கின்ற சமூகவன்முறைகள் தொடங்கி இளவயது திருமணங்கள் – சிறுவயது தற்கொலைகள் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய முழுமையான பொறுப்பு,  பொறுப்பற்ற இந்த பாடசாலைகளுக்கே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக