புதன், 12 ஏப்ரல், 2023

பி பி சி செய்தியாளர் திரு பொன் .மாணிக்கவாசகம் காலமானார்! இலங்கை போர் செய்திகளை தந்த முதன்மை செய்தியாளர்

May be an image of 1 person, smiling and eyeglasses

வட இலங்கையைச் சேர்ந்த மிகச்சிறந்த தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர்,
இலங்கை இனப்பிரச்சனையை, குறிப்பாக ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பம் முதல் அதன் கொடூரமான முடிவு வரை பதிவு செய்தார்..
முக்கியமாக கடும் போர் நடந்த பகுதிகளில் இருந்து. இலங்கை இராணுவம் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இடையில் இருந்து இந்த பணியை திறம்பட செய்தார்   இலங்கை ராணுவமும் போராளிகள் குழுக்களும் அவர்களை பற்றிய சிறு விமர்சனங்களை கூட சகித்து கொள்ளமுடியாதவர்கள்
இந்த நிலையில் திரு மாணிக்கவாசகம் அவர்கள் கத்தி முனையில் நடந்தார்.

இவரது ஊடக பணி ஒரு சில நாட்களோ வாரங்களோ மாதங்களோ வருடங்களோ அல்ல,
மாறாக 30  நீண்ட ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தது
 பல நேரங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இருந்தாலும்  அவர் தனது பணியை கைவிடவில்லை.
தன்னால் முடிந்த  அளவு சிறந்த ஊடகப்பணியை அவர் தொடர்ந்தார்.



போரின் மனித  அழிவுகள் அவலங்கள் அவற்றால் ஏற்படும்  துன்பங்களை உரிய முறையில் வெளிக் கொணர்வதற்கு அவர் தயங்கவில்லை

பலத்த கட்டுப்பாடுகள் நிலவிய போர்  சூழலில் எல்லா  பத்திரிகையாளர்களைப் போலவே, அவரும் சில  சமயங்களில் மனசோர்வை அடைந்திருப்பார்,
ஊடக சுதந்திரத்திற்கு உள்ள வரம்புகளைக் கண்டு மனமுடைந்து, விரக்தியடைந்து, கிளர்ச்சியடைந்து இருப்பார்.

ஆனால் அந்த நாளின் முடிவில், அவர் அமைதியாகி தனக்கே திரும்புவார் --
விடயங்களை நுட்பமாக உணரும் திறனும்  சுற்றி உள்ள விடயங்களில் உள்ள ஆர்வமும்  மனிதாபிமானமும் கொண்ட சிறந்த   தொழில்முறை பத்திரிகையாளர்.

சொல்லப்படும் வார்த்தைகள் கூறப்படும்  செய்திகளை விட சொல்லப்படாத செய்திகளே அதிகம்.
ஏராளமான செய்திகளையும் இலங்கை இனப்பிரச்சனை பற்றிய சரியான புரிதலும் நேரடியாக அவற்றை கண்டு தெரிந்த அறிவும் அவரது நாளாந்த செய்தி அறிக்கைகளில் இருந்தன.

எல்லா தரப்பினரிடமும் உள்ள  நல்லது கெட்டது மோசமானவற்றை பற்றிய அறிவு அவரிடம் பூரணமாக இருந்தது.
இரு தரப்பினர்களினதும் முழு  விடயங்களும் இவருக்கு தெரிந்திருந்தது . இவற்றை பதிவு செய்து வைத்திருந்தாரா  தெரியவில்லை.

பெரும்பாலான இலங்கைத் தமிழர்களைப் போலவே திரு மாணிக்க வாசகமும்  அவரது குடும்பத்தினரும் விருந்து உபசாரத்தில் சிறந்தவர்கள்.

நான் இலங்கைக்கு செல்லும் போதெல்லாம் எங்கள் பணியில் சக ஊழியராக அவரது தோழமையையும்.
ஒரு நல்ல நண்பராக அவரது கவனிப்பையும் விருந்தோம்பலையும் அனுபவித்தேன்.
Will miss you, my friend. Rest in peace - எல் ஆர் ஜெகதீசன் 

முது பெரும் ஊடகவியலாளரான திரு எல்.ஆர்.ஜெகதீசன் அவர்கள்  உலக புகழ் பெற்ற பி பி சி செய்தியாளரான மறைந்த  திரு பொன் .மாணிக்கவாசகம் அவர்களை குறித்து ஆங்கிலத்தில் எழுதிய இரங்கல் வரிகளை தமிழில் தர முயன்றிருக்கிறேன் 

 hirunews.lk  :  சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்
வவுனியாவுக்கான சூரியனின் செய்தியாளராக பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று தமது 76 ஆவது வயதில் காலமானார்.
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவர், சூரியன் வானொலி உள்ளிட்ட சில உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களின் செய்தியாளராக நீண்டகாலமாக செயற்பட்டிருந்தார்.

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற நெருக்கடியான காலகட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தமக்கான அச்சுறுத்தல்களையும் கருத்திற்கொள்ளாது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அவரின் பூதவுடல், வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையின் உள்ள அவரது இல்லத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

LR Jagadheesan  :   One of the finest Tamil journalists from northern Sri Lanka, reported the Srilankan ethnic conflict, particularly the armed struggle of Eezham Tamils from the start to its brutal end. That too from the conflict zone. Caught between the Srilankan Army and Tamil armed groups, who don't like even the smallest criticism of them, he literally walked on the knife edge. Not just one day or a week or a month or a year but more than 30 years. Many times his life was under threat. Yet he did not quit. He continued what he was best at. Reporting the war, human suffering and more. Tireless. Like all journalists, he too will be moody, frustrated and agitated at times on the limitations under which he has to do his job. But then by the end of the day, he would calm down and return to himself -- a sensitive and caring human being and professional journalist. As with any professional journalist, unsaid words and unreported information are more than reported news. He had wealth of information, and first-hand knowledge on the Srilankan ethnic conflict and the war as he lived, experienced and reported it day in and day out. The good, bad and ugly -- he knew it all on both sides. Not sure whether he recorded it all in any form. Like most Srilankan Tamils, he and his family were great hosts. Enjoyed his companionship and camaraderie as a colleague in our work and his care and hospitality as a friend whenever I visited Sri Lanka. Will miss you, my friend. Rest in peace.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக