ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

போலீஸ் முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை-உத்தர பிரதேசம் . 3 பேர் கைது

மாலை மலர்  : சமாஜ்வாடி கட்சி எம்.பி.யாக இருந்தவர் ஆதிக் அகமது. கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் கொலை செய்யப்பட்ட எம்எல்ஏவின் வழக்கறிஞர் உமேஷ் பால் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளில் ஒருவராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச கேங்ஸ்டராக கருதப்படும் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோரர் அஷ்ரப் மீது குறைந்தது 100 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இருவரும் அகமதாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அன்று மருத்துவ பரிசோதனைக்காக உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், இன்று நிருபர்களுக்கு இருவரும் போலீசாரின் முன்னிலையில் பேட்டி அளித்துக் கொண்டிருந்த நிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



முன்னதாக, தாங்கள் என்கவுன்டரில் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டிய ஆதிக் தனது குடும்பத்தை காப்பாற்றுமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி.யின் ஜான்சியில் நடந்த என்கவுன்டரில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத்தும் கொல்லப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட கும்பலின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ராகூறுகையில், "மக்கள் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் மீது மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டனர்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக