சனி, 8 ஏப்ரல், 2023

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை: வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்1

 மாலைமலர் : . சென்னை: பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர்மோடி பங்கேற்றார்.
அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு நன்றி.
மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு தரும்போது தான் நாடு வளர்ச்சி அடையும். மத்தியில் கூட்டாட்சி இருக்க வேண்டும் என்றால் மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்.
வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தேவை. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்துக்கு தேவையான போதிய ரெயில்வே திட்டங்கள் வழங்கப்படவில்லை. மக்களுக்கு நெருக்கமாக மாநிலங்கள் தான் இருக்கிறது.



 தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி பேசியபோது, வணக்கம் தமிழ்நாடு என ஆரம்பித்தார்.
சென்னை: பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: வணக்கம் தமிழ்நாடு என உரையை தொடங்கினார்.
தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் புத்தாண்டில் தமிழ்நாடு மக்களுக்கு பயன் தர உள்ளன. தமிழ்ப் புத்தாண்டு புதிய திட்டங்களின் தொடக்கமாக அமையும்.

தமிழகம் சிறந்த சாலை கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக உள்ளது. புதிய திட்டங்களால் சென்னை, மதுரை, கோவை நகரங்கள் நேரடியாக பயன்பெறும். கட்டுமானங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கின்றன.
 டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எப்போதெல்லாம் தமிழ்நாடு வளர்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா வளர்கிறது என தெரிவித்தார். PM Modi MK Stalin பிரதமர் மோடி முக ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக