சனி, 25 மார்ச், 2023

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி.. தலையில் பலத்த அடி!

 hirunews.lk :  பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இசைகச்சேரியின் போது, திடீரென அவர் மயங்கி கீழே விழுந்ததாகவும், இதனையடுத்து அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில் இவர் பாடிய 'வசீகரா', 'ஒன்றா ரெண்டா ஆசைகள்' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ லண்டனில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றுள்ள நிலையில்,அங்கு அவர் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவை இழந்துள்ளார். 

இதனையடுத்து அவருக்கு லண்டனிலே அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக