வெள்ளி, 17 மார்ச், 2023

திருச்சி சிவாவை நேரில் சந்தித்த கே.என். நேரு

நக்கீரன் : நேற்று முன்தினம் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, ''கட்சி தான் முக்கியம் என நினைப்பதால் இந்த விஷயங்களை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
இருப்பினும் இந்த நிகழ்வு எனக்கு மன வேதனை அளிக்கிறது.
 இது குறித்து எதுவும் நான் தெரிவிக்க விரும்பவில்லை'' என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்சி சிவாவின் இல்லத்திற்கு கே.என். நேரு வருகை புரிந்து இருவரும் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். அவருடன் 200க்கும் மேற்பட்ட திமுகவினரும் அங்கு வந்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக