திங்கள், 13 மார்ச், 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அசுர சாதனை! நாட்டின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி...

May be an image of 1 person and car

Manoharan Ashok  :  நாட்டைக் காப்பாற்றி விட்டாரா ரணில் ?
இவ்வளவு பயங்கரமான முறையில் திவாலாகிப் போன நாட்டை ஐந்து மாதங்களுக்குள் மீட்டெடுத்த தலைவரோ, அவ்வாறு மீண்டுவிட்ட நாடுகளோ உலகில் இல்லை. நாடு முழுமையாக இன்னும் மீட்கப்பட்டில்லை, ஆனால் ஆபத்தான கட்டங்களை நிச்சயமாக நாடு கடந்துவிட்டது. ICU வுக்குள் இருந்த நோயாளி தற்போது சாதாரண Ward க்கு மாற்றப் பட்டிருப்பதைப் போலத்தான் நாடு தற்போது உள்ளது.
கிரேக்கம் திவாலாகி பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன. அந்த நாடு ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருந்தாலும் பொருளாதார ரீதியாக இன்னும் மீளவில்லை.
இலங்கை மக்களைப் போலவே, வெனிசூலாவின் மக்களதும் பொய்ப் பகட்டின், கிறுக்குத்தனத்தின் காரணமாக, ஹியூகோ சாவேஸ் வெனிசுலாவின் ஜனாதிபதியாகி, நாட்டை முற்றாக அழித்து, இன்று வெனிசுலா மக்கள் வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள், மற்றொரு பகுதி மக்கள் பசியால் வாடுகிறார்கள்.  பணவீக்க விகிதம் 300% வரை உயர்ந்துள்ளது.


கியூபா, ஸிம்பாப்வே, லெபனான், அர்ஜென்டினா போன்ற நாடுகளும் இன்று மிக மோசமான தலைவிதிக்குள் வீழ்ந்துள்ளன.
ராஜபக்சே கும்பல் செய்த பாரிய பொருளாதாரக் குற்றச் செயல்களால் இலங்கை வீழ்ந்திருக்கும் பயங்கரமான படுகுழி கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தானது.
கோட்டாபய அழைத்தபோது சஜித் பிரேமதாசவோ அல்லது அனுரகுமாரவோ நாட்டைக் பொறுப்பேற்று இருந்தால் இந்நேரம் இறந்திருப்பார்கள் அல்லது நாட்டை விட்டுத் தப்பி ஓடியிருப்பார்கள். நாட்டின் பயங்கரம் புரிந்ததால்தான் நாட்டைப் பொறுப்பேற்காமல்  இருவரும் பயந்து ஓடி ஒளிந்து கொண்டனர். கௌரவ ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காகத் தனது உயிரைப் பணயம் வைக்காமல் இருந்திருந்தால் லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் மருந்து இன்றி வீதிகளில் உயிரிழந்திருப்பார்கள்.
இந்த யதார்த்தம் தெளிவாகப் புரிந்திருக்குமாயின் இந்த நாட்டின் ​​புத்திசாலிகள் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார ஆகியோரின் இழிவான மற்றும் கேவலமான அரசியல் செயற்பாட்டை முற்றாகத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். அவர்கள் இருவரும் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்தான நிலைமைகள் குறித்துப் பொறுப்புடன் சிந்தித்துச் செயல்படாமல் சிறுபிள்ளைத்தனமான, கேவலமான அரசியல் சித்து விளையாட்டுக்களில் காலத்தை வீணடிக்கின்றனர்.
கௌரவ ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உண்மையிலேயே ஒரு அற்புதமான செயலைச் செய்துள்ளார். 22 மில்லியன் மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றிய பெருமைக்குரிய தலைவர் அவர். உலகின் சிறந்த பொருளாதார நிபுணராக உலகில் மதிக்கப்படுபவர். உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். வரலாற்றில் அவர் என்றென்றும் பேசப் படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக