வியாழன், 30 மார்ச், 2023

கர்நாடக தேர்தல்: கருத்துக்கணிப்பு.. காங்கிரஸ் வெற்றி வாகை சூடுகிறது !

 மின்னம்பலம் - Jegadeesh  :  கர்நாடக தேர்தல்: கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
இந்நிலையில், ABP – CVoter இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (மார்ச் 29 ) வெளியாகியுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ், 224 தொகுதிகளில் 115 முதல் 127 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாஜக, 68 முதல் 80 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம், 23 முதல் 25 தொகுதிகளில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த முதலமைச்சர் யார்?
கர்நாடகாவின் முதலமைச்சராக நீங்கள் யாருக்கு வாய்ப்பளிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு 39.1 சதவிகிதத்தினர் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா என பதில் அளித்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, 31.1 சதவிகிதத்தினர் பாஜகவின் பசவராஜ் பொம்மையே முதலமைச்சராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எச். டி. குமாரசாமிக்கு ஆதரவாக 21.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக