திங்கள், 20 மார்ச், 2023

ஓடும் ரெயிலில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை ... காஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர் கேரளாவில் கைது

nn

நக்கீரன்  கல்லூரி மாணவிக்கு ரயில் பயணத்தின் போது மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த எல்லை பாதுகாப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதி சேர்ந்தவர் பிரதீஷ்குமார்.
இவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
 இந்நிலையில் விடுமுறைக்காக ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அந்த ரயிலில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரும் பயணித்து வந்துள்ளார். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேசிக் கொண்டு வந்துள்ளனர்.
அப்பொழுது மாணவிக்கு வலுக்கட்டாயமாக மதுபானத்தை கொடுத்த பிரதீஷ்குமார்
மாணவி மயக்கமடைந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பிரதீஷ்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக