புதன், 29 மார்ச், 2023

அமெரிக்க அரசு : ராகுல் காந்தி விடயத்தை உற்று நோக்குகிறோம்

 மாலைமலர் :  வாஷிங்டன்: மோடி பற்றிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.


இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறையின் துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறும்போது, 'சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அடிப்படையாகும். இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல் காந்தி மீதான வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்.
கருத்து சுதந்திரம் உள்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்து உறுதிப்பாட்டை இந்திய அரசுடன் பகிர்கிறோம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக