ஞாயிறு, 26 மார்ச், 2023

இலங்கையில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி! ரணில் அரசு அதிரடி

Image result for ranil wickramasinghe
president Ranil Wickremasinge

ஹிரு நியூஸ் :  நாட்டில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்க உள்ளது.
ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரிசியை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி

, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக