சனி, 18 பிப்ரவரி, 2023

ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை இன்றே விடுவிக்கப்படும்- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி

 மாலைமலர் : ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அறிக்கை சிறிய மாற்றங்கங்களுடன் ஏற்கப்பட்டது.
மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும் என தகவல்
புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று வழங்கப்படும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து விடுவிக்க உள்ளது.
தமிழ்நாட்டுக்கு  ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும்.
பென்சில் ஷார்ப்னர் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கவும்,
தேசிய தேர்வு முகமைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அறிக்கை சிறிய மாற்றங்களுடன் ஏற்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக